செங்கல்பட்டு: மேடவாக்கம் அருகே கடந்த 2017-ம் ஆண்டு பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய 7 வயது சிறுமியை தாக்கி பாலியல் அத்துமீறலில் ஈடுபட்ட பிரசாந்த் (26) என்பவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. சுண்ணாம்பு கொளத்தூர் சேர்ந்த பிரசாந்த் (26) என்பவருக்கு ரூ.41,000 அபராதம் விதித்து செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது.