ஆம்பூர்: திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூரில் பரிதா நிறுவனத்திற்கு சொந்தமான பல்வேறு ஷூ, தோல் மற்றும் ஷூ உதிரி பாகங்களின் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகளில் அதிகளவில் வரி ஏய்ப்பு நடந்திருப்பதாக புகார் எழுந்தது. அதன்பேரில், கடந்த 23ம் தேதி காலை முதல் மாவட்டத்தில் 12 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் 100 பேர் அதிரடியாக ரெய்டு நடத்த துவங்கினர். தொடர்ந்து நேற்று 4வது நாளாக நீடித்த ரெய்டு அதிகாலையில் முடிவடைந்துள்ளது. இதேபோல் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டில் கே.எச். குழுமத்துக்கு சொந்தமான தோல் தொழிற்சாலைகள் மற்றும் உரிமையாளர்கள் சம்பந்தப்பட்ட வீடுகள் என மொத்தம் 13 இடங்களிலும், பெருமுகையில் உள்ள தோல் தொழிற்சாலையிலும் 4வது நாளாக நேற்று அதிகாலை வருமானத்துறையினர் ரெய்டு நடத்தி முடித்துள்ளனர்.