டிரம்ப் இல்லத்தில் கைப்பற்றப்பட்ட பெட்டிகளில் 14 ரகசிய பதிவுகள்.
இவை டிரம்பிற்கு கூடுதலாக புதிய சட்ட ஆபத்தை ஏற்படுத்தலாம்.
முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் புளோரிடா இல்லத்தில் நடத்தப்பட்ட FBI சோதனையின் போது மீட்கப்பட்ட 15 பெட்டிகளில் 14 ரகசிய பதிவுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் தோல்வி அடைந்ததை அடுத்து, வெள்ளை மாளிகையில் இருந்து வெளியேறும் போது ரகசிய ஆவணங்களை எடுத்து சென்றதாகவும், அதனை அவரது பங்களாவில் மறைத்து வைத்து இருப்பதாகவும் புகார்கள் தெரிவிக்கப்பட்டன.
ASSOCIATED PRESS
இதையடுத்து புளோரிடா மாகணத்தில் உள்ள அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் மார்-ஏ-லகோ பங்களாவில் கடந்த 8ம் திகதி FBI அதிகாரிகளால் திடீர் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதில் 15 பெட்டிகள் வரை மீட்கப்பட்ட நிலையில், இவற்றில் 14 ரகசிய பதிவுகள் உள்ளதாகவும், அதில் 25 ஆவணங்கள் மிக ரகசியமானவை என்றும் வாக்கும்மூலம் ஒன்றில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
ASSOCIATED PRESS
ஆகஸ்ட் 8 அன்று Mar-a-Lago பங்களாவில் நடத்தப்பட்ட தேடுதலுக்கான நியாயத்தை விளக்கி அமெரிக்க நீதித்துறை பகுதி-தடைசெய்யப்பட்ட வாக்குமூலத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டது.
கூடுதல் செய்திகளுக்கு: ஆறு ஜெனரல்கள் நீக்கம்…தவறான தகவல்களை ரஷ்யா பரப்புகிறது: பிரித்தானிய உளவுத்துறை குற்றச்சாட்டு
இந்த ஆவணம் அதன் திருத்தப்பட்ட வடிவத்தில் கூட தற்போதைய குற்றவியல் விசாரணை பற்றிய புதிய விவரங்களை வழங்குகிறது, இவை டிரம்பிற்கு கூடுதலாக புதிய சட்ட ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
AFP