ஜூலை 1 முதல் DA உயர்வு ஏதும் இல்லை.. தகவல் பொய்யானது.. PIB விளக்கம்!

சமீப காலமாக சமூக வலைதளங்களில் ஜூலை 1 முதல் அகவிலைப்படி (DA) அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஒரு கருத்து பரவி வந்தது. தொடர்ந்து இது குறித்த செய்திகள் இணையத்தில் பரவி வருகின்றன.

ஆனால் அகவிலைப்படி உயர்த்தப்பட்டதாக கூறி வெளியாகி வரும் அறிவிப்புகள் பொய்யானவை என செலவினத் துறை விளக்கம் அளித்துள்ளது.

இது குறித்து PIB Fact check தனது ட்விட்டர் பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. செலவினத் துறை அப்படி ஏதும் அறிவிப்பினை வெளியிடவில்லை என்றும் விளக்கம் கொடுத்துள்ளது.

விமானத்தில் இனி இண்டர்நெட் சேவை.. டாடா-வின் புதிய கூட்டணி..!

இது உண்மை அல்ல

இது உண்மை அல்ல

இது குறித்து இணையத்தில் சுற்றி வரும் ஆர்டர் உண்மையான ஆர்டர் போன்றே உள்ளது. மிக கவனமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜுலை 1, 2022 முதல் அகவிலைப்படி 34%ல் இருந்து, 38% ஆக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது. ஆனால் அது உண்மையான ஆர்டர் அல்ல.

பொய்யான அறிக்கை

பொய்யான அறிக்கை

இந்த ஆர்டரில் 7 பாயிண்டுகள் கொடுத்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது. அதில் நிர்மலா தேவ் என செலவினத் துறை இயக்குனரின் கையெழுத்தும் உள்ளது. பார்ப்பதற்கு உண்மையான அறிக்கை போன்றே தோன்றினாலும் இது ஒரு பொய்யான அறிவிப்பு என்பதை இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

PIB busted?
 

PIB busted?

PIB busted என்பது பொது தகவல் பணியகத்தில் உண்மை சரிபார்ப்பு பிரிவாகும். இது அரசாங்க கொள்கைகள் பற்றிய போலி அறிவிப்புகள் குறித்து உண்மையை தன்மையை ஆராய்ந்து வெளியிடும். இதன் மூலம் தவறுகளை தடுத்தும் வருகின்றது. குறிப்பாக அரசின் திட்டங்கள் குறித்து ஏராளமான பொய்யான தகவல்கள் அவ்வப்போது இதுபோன்று இணையத்தி பரவி வருவதுண்டு. ஆக இதுபோன்ற பொய்யான பரப்புரைகளை தடுக்கும் விதமாக இந்த அமைப்பு செயல்பட்டு வருகின்றது.

பொய்யான செய்திகள்

பொய்யான செய்திகள்

இது அரசு திட்டங்கள், அறிவிப்புகளில் மட்டும் அல்ல, செய்திகளிலும் பொய்யான செய்திகளை கண்டறிந்து ஆய்வு செய்கிறது. இது பொய்யான தகவல்களை பரப்பியோர் மீதும் நடவடிக்கை எடுக்கிறது.

இதற்கிடையில் செப்டம்பர் 1 முதல் அகவிகைப்படி அதிகரிக்கலாம் என்ற பலத்த எதிர்பார்ப்பு, ஊழியர்கள் மத்தியில் நிலவி வ்ருகின்றது. அத்தகைய அதிகரிப்பு வருமா? ஊழியர்களுக்கு சலுகைகள் கிடைக்குமா? பொய்யாக பரவி வரும் தகவல் உண்மையாகுமா? என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Fact Check: Indian govt hike Dearness allowance by 4 percent?

Fact Check: Indian govt hike Dearness allowance by 4 percent?/ஜூலை 1 முதல் அப்படி ஏதும் இல்லை.. தகவல் பொய்யானது.. PIB விளக்கம்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.