திருமலை: ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களுக்கு நேற்று முதல் தடை விதித்து முதல்வர் ஜெகன் மோகன் உத்தரவிட்டுள்ளார். ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினத்தில் ‘பார்லே பார் தி ஓஷன்ஸ்’ என்ற அமைப்புடன் ஆந்திர அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், முதல்வர் ஜெகன் மோகன் பங்கேற்று பேசுகையில், ‘‘சுற்றுச்சூழல் பாதுகாப்பும், பொருளாதார முன்னேற்றமும் நாணயத்தின் இரு பக்கம்.
உலகின் மிகப்பெரிய கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்ச்சி விசாகப்பட்டினத்தில் இன்று (நேற்று) நடந்தது. இதில், ஒரே நாளில் 76 டன் பிளாஸ்டிக் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் மாசுபாட்டை கட்டுப்படுத்த ஆந்திராவில் பிளாஸ்டிக் பிளக்ஸ் பேனர்களுக்கு இன்று (நேற்று) முதல் தடை விதிக்கப்படுகிறது. இனி, துணியால் செய்த பிளக்ஸ் பேனர்கள் மட்டுமே அனுமதிக்கப்படும்’’ என்றார்.