ராஜாத்தி அம்மாள் மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி சென்றுள்ளார். அவருடன்
உடன் பயணித்துள்ளார்.
முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மனைவியும், தூத்துக்குடு எம்.பி. கனிமொழியின் தாயுமான ராஜாத்தி அம்மாள் முதுமை காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்தார்.
அவருக்கு கடந்த சில மாதங்களாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
செரிமான மண்டல பாதிப்பால் அவதிப்பட்டு வந்த அவரை மகள் கனிமொழி மேல் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் சென்றுள்ளார்.
இரண்டு வாரங்கள் அங்கு தங்கி சிகிச்சை பெற்று பின்னர் நாடு திரும்புவார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.