பணியாளர்களின் சம்பள விவகாரம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

இந்தியாவில் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு அதன் காரணமாக பல நிறுவனங்களில் ஊழியர்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்கள் என்பதும் சில ஊழியர்களுக்கு சம்பளம் குறைக்கப்பட்டது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு படிப்படியாகக் குறைந்து உள்ள நிலையில் மீண்டும் ஊழியர்கள் வேலைக்கு எடுக்கப்பட்டு வருகிறார்கள் என்பதும் அதேபோல் ஊதியம் குறைக்கப்பட்டவர்களுக்கு மீண்டும் ஊதிய உயர்வு வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் ஏர் இந்தியா ஊழியர்களின் சம்பளத்தை செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்திய நிலைக்கு கொண்டுவர ஏர் இந்தியா நிறுவனம் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஏர் இந்தியா எடுத்த முடிவால் பயணிகள் மகிழ்ச்சி… சென்னை பயணிகளுக்கு பலன் தருமா?

ஏர் இந்தியா

ஏர் இந்தியா

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக ஏர் இந்தியா நிறுவனத்தின் ஊழியர்களுக்கு சம்பளக்குறைப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதும் இதனால் ஊழியர்கள் அதிருப்தியில் இருந்தார்கள் என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் செப்டம்பர் 1ஆம் தேதி முதல் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முந்தைய காலத்தில் உள்ள சம்பளத்தை ஊழியர்களுக்கு வழங்க ஏர் இந்தியா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சம்பள உயர்வு

சம்பள உயர்வு

இந்த ஆண்டு ஜனவரியில் டாடா நிறுவனத்தால் ஏர் இந்தியா நிறுவனம் கைப்பற்றப்பட்ட போது, அந்நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வரும் ஒரு நிறுவனமாக இருந்தது. தற்போது நஷ்டத்தில் இருந்து படிப்படியாக மீண்டு வரும் ஏர் இந்தியா, செப்டம்பர் 1 முதல் தனது பணியாளர்களுக்கு ஊதிய உயர்வு மற்றும் புதிய பணியாளர்களை பணியமர்த்தல் ஆகியவற்றை செய்ய முடிவு செய்துள்ளது.

கேம்ப்பெல் வில்சன்
 

கேம்ப்பெல் வில்சன்

ஏர் இந்திய தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் கேம்ப்பெல் வில்சன் அவர்கள் இதுகுறித்து கூறிய போது, ‘2022ஆம் ஆண்டு செப்டம்பர் 1 முதல் அனைத்து ஊழியர்களுக்கும் சம்பளத்தை கொரோனாவுக்கு முந்திய நிலையில் மீட்டெடுக்க உள்ளதாக தெரிவித்துள்ளார்.

லாபம்

லாபம்

ஏர் இந்தியா நிறுவனம் லாபத்திற்கு திருப்புவதற்கு இன்னும் நிறைய உழைக்க வேண்டியது இருக்கிறது என்றும் ஆனால் அதே நேரத்தில் ஊழியர்களின் சம்பளக்குறைப்பை மேலும் தொடர முடியாது என்பதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

நிதி நிலை

நிதி நிலை

இது ஒரு வரவேற்கத்தக்க முக்கியமான முடிவு என்றும் ஊழியர்கள் இதனால் மகிழ்ச்சி அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பாதிப்பு விமானத்துறையை மிகவும் கணிசமான அளவில் பாதித்து உள்ள நிலையில் தங்களது ஊழியர்களின் நிதி நிலையை கணக்கில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Air India To Restore Staff Salaries To Pre-COVID-19 Level From Sept 1

Air India To Restore Staff Salaries To Pre-COVID-19 Level From Sept 1 | பணியாளர்களின் சம்பள விவகாரம்.. ஏர் இந்தியா எடுத்த அதிரடி முடிவு!

Story first published: Saturday, August 27, 2022, 6:54 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.