பரபரப்புக்கு பஞ்சம் இல்லாத இந்தியா – பாக்., போட்டி : யப் டிவியில் காணுங்கள்

ஆசிய கிரிக்கெட் போட்டிகள் ஆகஸ்ட் 27ஆன இன்று முதல் செப்டம்பர் 11 வரை துபாயில் நடக்கிறது. இதில் இந்தியா, இலங்கை, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஹாங்காங் என மொத்தம் 6 அணிகள் மோதுகின்றன. இவற்றில் ‛ஏ’ அணியில் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகள் இடம் பெற்றுள்ளன. ஆக., 28(நாளை) அன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. அனல் பறக்க போகும் இந்த போட்டியினை யப் டிவியில் நேரலையில் பார்க்கலாம்.

இந்த போட்டிக்காக இந்தியா – பாகிஸ்தான் அணி வீரர்கள் துபாயில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இருநாடுகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி என்பது பல தசாப்தங்களை கடந்து நீடித்து வருகிறது. ஏற்கனவே எல்லை பிரச்னை, பாதுகாப்பு தொடர்பான தீர்க்கப்படாத விஷயங்கள் உள்ளிட்ட பல பிரச்னைகளால் இருநாட்டு உறவும் சுமூகமின்றி உள்ளது. இதன் வெளிப்பாடும் கிரிக்கெட் போட்டியின் போது வெளிப்படும். அதேசமயம் இரு நாட்டு வீரர்களும் நட்புடன் இருக்கும் வீடியோவை பிசிசிஐ சமீபத்தில் வெளியிட்டது.

போட்டி, பகை என்பது மைதானத்திற்குள் மட்டுமே உள்ளது. மைதானத்திற்கு வெளியே இருநாட்டு வீரர்கள் பெரும்பாலும் நல்ல உறவையையே பேணுகிறார்கள். சமீபகாலமாக பெரிய அளவில் ரன்களை எடுக்க முடியாமல் அழுத்தத்தில் இருக்கும் விராட் கோலிக்கு பாகிஸ்தான் வீரர் பாபர் அசாம் ஆதரவு தெரிவித்து, வாழ்த்து தெரிவித்துள்ளார். ஆசிய கிரிக்கெட் போட்டி மூலம் நீண்ட இடைவேளைக்குப் பிறகு விராட் மீண்டும் அணிக்கு திரும்பி உள்ளார்.

ஆசிய கோப்பை வரலாற்றில் அதிக தனிநபர் ஸ்கோர் அடித்த வீரரான விராட், இந்த போட்டிகள் மூலம் இன்னும் அதிக ரன்கள் எடுத்து மீண்டும் பார்முக்கு திரும்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இவருடன் கேப்டன் ரோஹித் சர்மா, கே.எல்.ராகுல், சூர்ய குமார் யாதவ், ரிஷப் பந்த் ஆகியோருடன் இந்திய பேட்டிங்கில் அசத்தி வருகின்றனர்.

பாகிஸ்தானுக்கு எதிராக ரோஹித் சர்மா முழுநேர கேப்டனாக களமிறங்குவது இதுவே முதல் முறையாகும். அதேசமயம் ஆதிக்கம் செலுத்தும் இந்தியாவுக்கு எதிராக கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பையை வென்ற பிறகு பாகிஸ்தானின் பாபர் அசாமும் முழு நம்பிக்கையுடன் இருக்கிறார். இதானால் இரு அணிகளுக்கும் இடையேயான போட்டி பரபரப்பாகவும், அனல் பறக்கும் விதமாகவும் இருக்கும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அத்தகைய போட்டியினை யப் டிவியில் நேரலையில் கண்டு மகிழுங்கள்.

மேலும் முழு விபரங்களுக்கு இந்த லிங்க்கை கிளிக் செய்யவும் : https://www.yupptv.com/cricket

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.