ஜெயலலிதா மரணம் குறித்து ஆராய்வதற்காக அமைக்கப்பட்ட ஆறுமுகசாமி ஆணையம் தனது விசாரணையை முடித்து முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் 590 பக்க அறிக்கையை சமர்ப்பித்தது.
நீதியரசர் ஆறுமுகசாமி நேரில் வந்து அறிக்கையை சமர்ப்பித்தார்.
பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் சாட்சிகளை விசாரிப்பதில் தாம் காலதாமதம் செய்யவில்லை என்று தெரிவித்தார். சாட்சிகளிடம் விரிவாக விசாரணை செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார். ஆணையத்தின் ஐயங்கள் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன என்று கூறிய அவர், இரண்டு பிரிவுகளாக பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.
ஜெயலலிதா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டதில் எந்த சந்தேகமும் இல்லை என்று கூறிய அவர், விசாரணைக்கு சசிகலா முழு ஒத்துழைப்பு அளித்தார் என்றும் குறிப்பிட்டார்.
சசிகலா நேரில் வராததால் அவரிடம் எழுத்துப்பூர்வமாக விளக்கம் பெறப்பட்டது என்றும் அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
மனுதாரர் உள்பட 154 சாட்சியங்களிடம் விசாரணை நடத்தியிருக்கிறோம் என்றும் நீதியரசர் ஆறுமுகசாமி தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்