ராக்கெட்ரி படத்தின் தகவல்கள் பொய்யானவை – பரபரப்பை கிளப்பும் விஞ்ஞானிகள்

நடிகர் மாதவன் இயக்குநர் அவதாரம் எடுத்த படம் ராக்கெட்ரி. நாட்டின் ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றுவிட்டதாக போலி புகார் அளிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட நம்பி நாராயணனின் வாழ்க்கையை தழுவி படம் எடுக்கப்பட்டிருந்தது. நம்பி நாரயணனாக மாதவன், அவரது மனைவியாக சிம்ரன் நடித்திருந்த இப்படத்தில் சூர்யா கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். சாம் சி.எஸ். இசையமைத்தார்.அதேபோல் ஹிந்தி பதிப்பில் ஷாருக்கான் கெஸ்ட் ரோலில் நடித்தார். இருவரும் சம்பளமே வாங்காமல் நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மிகப்பெரும் எதிர்பார்ப்போடு பான் இந்தியா படமாக வெளியான ராக்கெட்ரி ரசிகர்களிடம் கலவையான விமர்சனங்களை பெற்றது. அதுமட்டுமின்றி, ராக்கெட் பற்றி மாதவன் எந்த வித சமரசமும் செய்யாமல் எடுத்திருக்கிறார். ஆனால் ராக்கெட் தொழில்நுட்பத்தையும், அறிவியலையும் இன்னமும் ரசிகர்களுக்கு புரியும்படி எடுத்திருக்கலாம் என்றும்; நம்பி நாராயணன் நடத்திய சட்டப்போராட்டம் பற்றி படத்தில் காட்சிகள் இல்லாதது படத்திற்கு மைனஸ் என்றும் விமர்சகர்கள் கூறினர். மேலும் படத்தை இயக்கியதில் மாதவனிடம் சில மைனஸ்கள் தென்பட்டதாகவும் பேச்சு எழுந்தது.

இந்நிலையில், ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’ திரைப்படத்தில் கூறப்பட்ட தகவல்களில் 90 சதவீதம் பொய்யானவை’ என, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் முன்னாள் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானிகள் ஏ.இ.முத்துநாயகம், இ.வி.எஸ்.நம்பூதிரி, டி.சசிகுமாரன் உள்ளிட்டோர் இந்த விவகாரம் குறித்து பேசுகையில்,  “விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கை வரலாற்று சினிமாவில் 90 சதவீதம் தவறான தகவல்கள் கூறப்பட்டுள்ளன. இஸ்ரோவில் பணியாற்றி, குடியரசுத் தலைவராகவும் பதவி வகித்த அப்துல்கலாமின் தவறை திருத்தியதாக கூறியிருப்பது முற்றிலும் தவறான தகவல். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.