தேசிய முற்போக்கு திராவிட கழக தலைவர்
தற்போது உடல் நிலை சரியில்லாமல் வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார். ஓடியாடி கட்சி பணிகளை சுறுசுறுப்பாக மேற்கொண்டு வந்த விஜயகாந்த் கடந்த சில ஆண்டாக ஒரே இடத்தில் அமர வைக்கப்பட்டு இருப்பது குடும்பத்தினர் மற்றும் தொண்டர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
இதனால் கட்சி பணிகள் தொய்வடைந்ததால் சமீபத்திய தேர்தல்களில்
தோல்வியையே சந்திக்க நேர்ந்தது. எனவே சோர்ந்துபோய் உள்ள தேமுதிக தொண்டர்கள் மீண்டும் சுறுசுறுப்பாக கட்சி பணியாற்ற வேண்டுமானால் விஜயகாந்துக்கு பதிலாக அவரது மனைவி பிரேமலதா முக்கிய பொறுப்புக்கு வர வேண்டும் என, தொடர்ச்சியாக கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன.
ஆனாலும் விஜயகாந்த் விரைவில் பூரண குணம் பெறுவார். முன்பை போல் கட்சி பணியை எடுத்து செய்வார் என்கிற அதீத நம்பிக்கை அவரது மனைவி, மகன்களுக்கு மிக அதிகமாகவே இருக்கிறது.
இதன் காரணமாகவே விஜயகாந்த் இடத்தில் வேறு யாரையும் அமர்த்தி பார்க்க குடும்பத்தினர் விரும்பவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் மக்களவை தேர்தலுக்கு இன்னும் 2 ஆண்டே உள்ளதால், அதற்குள் கட்சியையும் ஃபார்முக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
எனவே வர போகும் நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு கூட்டணிக்கான வியூகங்கள் வகுத்தல், தொகுதிப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றால் தே.மு.தி.க உயிர்ப்புடன் இருப்பதை மற்ற கட்சிகளுக்கு காட்டியாக வேண்டும்.
இதன் தொடர்ச்சியாக தேமுதிகவில் அதிரடி மாற்றம் கொண்டு வந்து மறுசீரமைப்பு செய்தால் எதிர்காலம் நன்றாக இருக்கும் என்கின்ற முடிவுக்கு தற்போதைய பொருளாளரும், விஜயகாந்த் மனைவியுமான பிரேமலதா முடிவெடுத்துள்ளதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக கட்சி முக்கிய நிர்வாகிகளுடன் பிரேமலதா மற்றும் சுதீஷ் ஆகியோர் கலந்து ஆலோசித்துள்ளனர். அப்போது அவர்கள், ‘நாங்களும் இதை ஆண்டுக்கணக்காக வலியுறுத்தி வருகிறோம்’ என தெம்புடன் கூறியுள்ளனர்.
இதை நல்ல வார்த்தையாக எடுத்துக்கொண்ட
வெகு விரைவில் கட்சியை மறுசீரமைக்க உட்கட்சி தேர்தலை சுமூகமாக முடித்துவிட்டு பொதுக்குழுவை கூட்ட முடிவெடுத்து உள்ளதாக கூறப்படுகிறது. அதில், இது தொடர்பாக பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதே சமயம் தேமுதிக மறுசீரமைப்பு செய்யப்படும் பட்சத்தில் தற்போது பொருளாளராக இருக்கும் பிரேமலதா செயல் தலைவர், பொருளாளராக எல்.கே.சுதீஷ், இளைஞர் அணி செயலாளராக விஜய பிரபாகரன் ஆகியோர் அமர்த்தப்படுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்த செய்தி தேமுதிக தொண்டர்களுக்கு திடீர் உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளித்தாலும், ‘அப்போ.. எங்க கேப்டன் அவ்வளவு தானா?’ என கண்களில் ஈரத்துடன் எழுப்புகிற கேள்விக்கு யார் பதில் சொல்ல போகிறார்கள்? என்பது தான் தெரியவில்லை.