மைக்ரோசாப்ட் பால் ஆலன் கலைப்பொருட்கள் ஏலம்.. மதிப்பு இவ்வளவு பில்லியனா?

மறைந்த மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்கள் ஏலம் விடப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்த கலைப்பொருட்களை ஏலம் எடுக்க உலகெங்கிலும் உள்ள செல்வந்தர்கள் மிகுந்த ஆர்வத்தில் இருப்பதால் மிகப்பெரிய தொகைக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறைந்தபட்சம் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்கள் ஒரு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மைக்ரோசாப்ட்: 200 பேர் பணிநீக்கம்.. ஊழியர்கள் அதிர்ச்சி..!

 பால் ஆலன்

பால் ஆலன்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்களின் தொகுப்பை ஏலம் விடுவதற்கு திட்டமிட்டுள்ளதாக அறிவிக்கப்படுள்ளது. அதன் மதிப்பு $1 பில்லியனுக்கும் அதிகமாக இருக்கும்.

ஏல நிறுவனம் கிறிஸ்டி

ஏல நிறுவனம் கிறிஸ்டி

500 ஆண்டுகால கலை பொருட்கள் ஏலம் விடும் வரலாற்றில் 150 க்கும் மேற்பட்ட ஏல விற்பனை தஙகள் நிறுவனத்தால் நடந்துள்ளது என்றும், தங்கள் நிறுவனத்தின் வரலாற்றில் மிகப்பெரிய கலைப்பொருட்களின் ஏலமாக இந்த ஏலம் இருக்கும்” என்று ஏல நிறுவனமான கிறிஸ்டி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஓவியம்
 

ஓவியம்

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்கள் சேகரித்த கலைப்பொருட்களில் பிரெஞ்சு ஓவியர் பால் செசானின் “La montagne Sainte-Victoire” என்ற ஓவியமும் அடங்கும். இதன் மதிப்பு மட்டுமே $100 மில்லியனுக்கும் அதிகமாக இருக்கும் என்று ஏல நிறுவனம் தெரிவித்துள்ளது.

கலைப்பொருட்கள்

கலைப்பொருட்கள்

இது மறைந்த கோடீஸ்வரர் மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களின் கலைப்பொருட்களை ஏலம் எடுக்க ஆர்வமுள்ள கலை சேகரிப்பாளர்கள் ஏலத்தில் கலந்து கொள்ளலாம் என ஏல நிறுவனம் கிறிஸ்டி தெரிவித்துள்ளது.

 கலை பகுப்பாய்வு

கலை பகுப்பாய்வு

மைக்ரோசாப்ட் இணை நிறுவனர் பால் ஆலன் அவர்களை பொருத்தவரை கலைப்பொருட்கள், கலை பகுப்பாய்வு மிகவும் உணர்வு மிகுந்தவை. அவர் சேகரித்த ஒவ்வொரு பொருளும் கலை யதார்த்தத்தின் தனித்துவமான பார்வையை வெளிப்படுத்துகிறது. ஒரு கலைஞனின் உள் மனநிலை மற்றும் கலைஞனின் முழுமையான எண்ணங்களை வெளிப்படுத்தும் அளவில் கலைப்பொருட்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

ஏலம்

ஏலம்

இந்த ஏலம் குறித்து கிறிஸ்டியின் தலைமை நிர்வாக அதிகாரி குய்லூம் செருட்டி கூறுகையில், இந்த ஏலம் பால் ஆலனின் உத்வேகமான உருவம், படைப்புகளின் அசாதாரண தரம், பன்முகத்தன்மை, மற்றும் அனைத்து வருவாயின் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் கலவையை கொண்டது’ என்று கூறினார்.

பில்கேட்ஸ்- பால் ஆலம்

பில்கேட்ஸ்- பால் ஆலம்

கடந்த 1975ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் அவர்களுடன் இணைந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை நிறுவிய பால் ஆலன் கடந்த 2018ஆம் ஆண்டு காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: microsoft paul allen auction

English summary

Microsoft co-founder Paul Allen’s art collection, worth over $1 billion, to go up for auction

Microsoft co-founder Paul Allen’s art collection, worth over $1 billion, to go up for auction | மைக்ரோசாப்ட் பால் ஆலன் கலைப்பொருட்கள் ஏலம்.. மதிப்பு இவ்வளவு பில்லியனா?

Story first published: Saturday, August 27, 2022, 16:11 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.