இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்’ மற்றும் ஜப்பான் இந்திய இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடடும் விதமாக ஒன்றிணைந்து ஜப்பானின் இகேபனா எனும் கலையை இந்திய பாரம்பரியதுடன் செய்வது மற்றும் இந்திய பாரம்பரிய சமையல் முறை இரண்டும் ஒன்றாக இடம்பெற்றியிருக்கும் “மிஷ்ரானா” என்ற புத்தகம் சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் கலாச்சார பிரிவு சார்பாக வெளியிடப்பட்டது.
இகேபனா என்பது ஜப்பானிய பாரம்பரிய கலையான மலர்கள் மற்றும் அந்தந்த பகுதிகளில் கிடைக்கக்கூடிய தாவரங்களை கொண்டு செய்யப்படும் அலங்கார வேலைப்பாடு ஆகும். இகேபனா எனும் அலங்கார கலையால் இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் மற்றும் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதன் முக்கியத்துவத்தையும் உணர்த்துகிறது.
இந்திய சுதந்திரத்தின் 75 ஆண்டுகள் ‘ஆசாதி கா அம்ரித் மஹோத்சவ்‘ மற்றும் ஜப்பான் இந்திய இராஜதந்திர உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் கொண்டாடும் விதமாக ஒன்றிணைந்து ஜப்பானின் இகேபனா எனும் கலையை இந்திய பாரம்பரியதுடன் செய்வது இருநாடுகளின் உறவுக்கும் ஒரு மைல் கல்லாகும்.
வெளியிடப்பட்டுள்ள இந்த மிஷ்ரானா என்ற புத்தகத்தில் 75 இகேபனா கலைஞர்களின் இந்திய சமையல் வகைகள் மற்றும் மலர் அலங்காரத்தின் எவ்வாறு செய்வது என்பது குறித்த தகவல்கள் மற்றும் அதன் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த 75 கலைஞர்களில் உற்சாகமான இளைஞர்கள், எண்பத்தைந்து வயது முதியவர்கள், தமிழகம் மட்டுமின்றி ஹைதராபாத், பெங்களூர் மற்றும் டெல்லி சேர்ந்தவர்களும் இதில் பங்குபெற்றுள்ளனர்.
மேலும் இதில் ஈடுபட்டவர்கள் பரந்த திறமையையும் கொண்ட மருத்துவர்கள், ஆடை வடிவமைப்பாளர்கள் வழக்கறிஞர்கள், ஓவியர்கள், ஆசிரியர்கள் மற்றும் கின்னஸ் உலக சாதனை புத்தகத்தில் இடம்
பெற்றவர்களும் அடங்குவார்கள். குறிப்பாக இந்த இகேபனா காலையில் கைதேர்ந்த ரேகா ரெட்டி, இந்துமதி தவ்லூர்,பத்மா துவ்வூரி மற்றும் நிருபா ரெட்டி ஆகியோர் இகேபனா கலையை பரப்புவதில் மிகுந்த ஆர்வம் உள்ளவர்கள். இவர்களின் இயற்கையின் மீதான காதலால் எழுத்து மற்றும் படைப்புக்களின் மூலம் தோட்டக்கலை ஆர்வம் உள்ளவர்களுக்கு இக்கலைகளை கற்பித்தும் வருகின்றனர்.
இகேபனா மற்றும் சமையல் வகைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட வகைகளை இந்த புத்தகத்தில் இடப்பெற்றிருப்பதன் மூலம் இந்தியா மற்றும் ஜப்பானின் கலாச்சாரங்கள் ஒன்றாக கலப்பதன் மூலம் ஒரு சிறந்த புரிதலையும் உருவாக்குகிறது. சென்னையில் உள்ள ஜப்பான் துணைத் தூதரகத்தின் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் பல்வேறு நாடுகளின் தூதரங்களை சேர்ந்த அதிகாரிகள் வடசென்னை பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.