ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் அரசியல் சூழல், கட்சியின் நிர்வாகிகள், செயல்பாடு, எதிர்வரும் தேர்தலுக்கு எவ்வாறு தயாராவது உள்ளிட்டவை குறித்து பா.ஜ., நிர்வாகிகளுடன் அமித் ஷா ஆலோசனை மேற்கொண்டார்.
பா.ஜ., வட்டாரங்கள் கூறுகையில் “ ஜம்மு காஷ்மீரில் இப்போதைக்கு தேர்தல் நடத்தப்படும் என்று பாஜக எதிர்பார்க்கவில்லை. தேர்தல் அறிக்கை தயாரித்தல், தொகுதிகள், எவ்வாறு தேர்தலுக்கு தயாராவது குறித்துதான் பாஜ., ஆலோசித்து வருகிறது. தேர்தல் எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் தீர்மானிக்கும். ஆனால், தேர்தலை எப்போது வேண்டுமானாலும் எதிர்கொள்ள பாஜக தயாராக இருக்க வேண்டும்” எனத் தெரிவித்தார்.
மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சந்திப்பில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங், ஜம்மு காஷ்மீர் பாஜக தலைவர் ரவீந்திர ரெய்னா, தேவேந்திர சிங் ராணா, ஜூகல் கிஷோர், சக்தி ராஜ் பரிஹார், பாஜக பொதுச்செயலாளர் ஜம்முகாஷ்மீர் பொறுப்பாளர் தருண் சவுக், துணைப் பொருப்பாளர் ஆஷிஸ் சூத் ஆகியோரும் பங்கேற்றனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement