'இந்தியாவுக்கு திரும்பி போங்க'… இந்திய பெண்ணை அடித்த அமெரிக்க பெண்… பரபரப்பு வீடியோ..!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள பிளானோவில் அமெரிக்க வாழ் இந்திய பெண்கள் சிலர் சிக்ஸ்டி வைன்ஸ் என்ற உணவகத்துக்கு வெளியே நின்று கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த எஸ்மரால்டா அப்டன் என்ற பெண் இந்திய பெண்களை பார்த்து, ” நீங்கள் இந்தியர்கள் தானே? இந்தியர்களை நான் வெறுக்கிறேன்.. நீஙகள் ஏன் அமெரிக்காவில் இருக்கிறீர்கள்? இந்தியாவுக்குத் திரும்பிச் செல்லுங்கள்” என ஆக்ரோஷமாக கேட்டார்.

இதனால் ஆத்திரமடைந்த இந்திய பெண்கள், அவரிடம் முறையிட்டதோடு அந்த நிகழ்வினை செல்போனில் வீடியோவாகவும் எடுத்து கொண்டிருந்தனர். தொடர்ந்து அந்த அமெரிக்க பெண் இந்திய பெண்களை பார்த்து, இந்தியர்கள் சிறந்த வாழக்கையை விரும்புகிறார்கள், இந்தியாவில் வாழ்க்கை மிகவும் சிறப்பாக இருந்தால் ஏன் இங்கு வருகிறீர்கள் என்று அந்த பெண்ணின் பேச்சுக்கள் இனவாத வெறியை வெளிப்படுத்தியதாகவே இருந்தது. இதனால், கோபமடைந்த இந்திய பெண்கள், எங்களை ஒரு அமெரிக்க பெண் எப்படி பேசுகிறார் பாருங்கள் என கூறி வீடியோ பதிவு செய்துகொண்டிருக்க, உடனே அந்த பெண், நான் ஒரு மெக்சிகன் அமெரிக்கர் என்று பதிலளித்தார்.

அப்போது, இந்திய பெண்கள், நீங்கள் மெக்சிகன் என்றால், ஏன் மெக்சிகோவுக்குத் திரும்பிச் செல்லக்கூடாது” என கூறினர். உடனே அந்த பெண் ஆக்ரோஷமடைந்து வீடியோ எடுத்துக்கொண்டிருந்த ஒரு பெண்ணை அடித்து தாக்கியுள்ளார். இவை அனைத்தும் வீடியோவாக பதிவாகியிருந்தது. பின்னர் அந்த மெக்சிகோ பெண் அங்கிருந்து சென்றதும் பாதிக்கப்பட்ட பெண்கள் பிளானோ காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர்.

அதன் பேரில், எஸ்மரால்டாவின் புகைப்படம் மற்றும் அவரது காரின் எண்ணை வைத்து போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவர் மீது தாக்குதல் மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

மேலும், இந்த சம்பவத்துக்கு மெக்சிகன் மற்றும் லத்தீன் பாரம்பரியத்தைச் சேர்ந்த பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மெக்சிகன் மற்றும் லத்தீன் வாழ் மக்கள் அமெரிக்காவில் அதிகமானோர் இருப்பதால் அதில் பலர் தங்களை புலம்பெயர்ந்தோராகவே நினைப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.