வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: டில்லியில், முதல்வர் கெஜ்ரிவால் கையெழுத்து இல்லாமல், அவரது அலுவலக ஊழியர்கள் கையெழுத்து போட்டு அனுப்பிய கோப்புகளை கவர்னர் விகே சக்சேனா திருப்பி அனுப்பினார்.
டில்லி துணை நிலை கவர்னர் விகே சக்சேனா மற்றும் முதல்வர் கெஜ்ரிவால் அரசு இடையே மோதல் போக்கு உள்ளது. கவர்னரின் ஒப்புதல் கேட்டு 45க்கும் மேற்பட்ட கோப்புகளை முதல்வர் அலுவலக அதிகாரிகள் அனுப்பி வைத்திருந்தனர். அந்த கோப்புகளில் அதிகாரிகள் கையெழுத்து போட்டிருந்தனர். கடந்த வாரம் கெஜ்ரிவாலுக்கு கடிதம் எழுதிய சக்சேனா, கோப்புகளில் முதல்வரின் கையெழுத்து இல்லாததை சுட்டிக்காட்டியிருந்தார். அதில், அவரது கையெழுத்து இல்லாமல் கோப்புகளுக்கு ஒப்புதல் மற்றும் கருத்து கேட்டு கவர்னர் அலுவலகத்திற்கு வருவதாக கூறியிருந்தார். இதன் பின்னரும் முதல்வர் கையெழுத்து இல்லாமல் கோப்புகள் கவர்னர் அலுவலகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்நிலையில், அந்த கோப்புகளை சக்சேனா, ஒப்புதல் அளிக்காமல் டில்லி அரசுக்கே திருப்பி அனுப்பினார். திருப்பி அனுப்பிய கோப்புகளில், கல்வித்துறை, வக்பு போர்டு உள்ளிட்ட முக்கிய கோப்புகள் அடங்கும் என கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement