பிறந்தநாள் பரிசாக வீடு தேடி வரும் வாக்காளர் அட்டை..! – தேர்தல் ஆணையம் அசத்தல் அறிவிப்பு ..!

17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக செய்து கொள்ள முடியும், அப்படி பதிவு செய்த பிறகு 18வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். எனவே 17 வயது முடிந்தவர்கள் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும் என இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய சந்திரா பாண்டே,
இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் ஜனநாயகத்திற்கு மிகவும் முக்கியம். அந்த காலங்களில் வாக்காளர் பட்டியலில் பெண்கள் இவருடைய பெண், மனைவி என குறிப்பிட்ட காலங்கள் போய் தற்போது மொத்தமுள்ள வாக்காளர் பட்டியலில் 50% பெண்கள் உள்ளனர். இந்தியாவில் மக்கள் 16% மட்டுமே கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்த காலத்தில் வாக்காளர்களுக்கு சின்னம் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தி ஜனநாயகம் வளர்க்கப்பட்டது. தற்போது இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடாக வளர்ந்துள்ளது.
ஒரு வாக்காளர் கூட விடுபட்டுவிடக் கூடாது என்பது தான் தேர்தல் ஆணையத்தின் இலக்கு. உலகில் இளமையான நாடாகவும் இளைஞர்கள் அதிகம் உள்ள நாடாகவும் இந்தியா விளங்குகிறது . வாக்காளர் பட்டியல் ஆண்டிற்கு ஜனவரி, ஏப்ரல், ஜூலை, அக்டோபர் என 4 காலாண்டு அளவில் வெளியிடப்படுகிறது. ஜனவரியில் 18 வயது பூர்த்தி செய்பவர்கள் ஏப்ரலில் வெளிவரும் பட்டியலில் சேர்ந்து கொள்ள முடியும். அதேபோல ஏப்ரல் ஜூலை அக்டோபர் ஆகிய மாதங்களில் இடைப்பட்ட காலத்தில் 18 வயது பூர்த்தி செய்தால் அடுத்து அடுத்து வரும் வாக்காளர் பட்டியலில் பெயர் இணைக்கப்படும்.
சினிமா டிக்கெட் முன்னரே பதிவு செய்து கொள்வது போலவே 17 வயது முடிந்தவர்கள் வாக்காளர் அட்டைக்கான அட்வான்ஸ் புக்கிங் ஆன்லைன் மூலமாக தற்போது செய்து கொள்ள முடியும். 18 வது பிறந்த தினத்தில் உங்கள் வீட்டிற்கு பரிசாக வாக்காளர் அடையாள அட்டை வந்து சேரும். 17 வயது பூர்த்தி ஆனவர்கள் வழிமுறைகளை பின்பற்றி வாக்காளர் அட்டைக்கான முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். ஒரு இளைஞரின் வாக்கைக்கூட தவறவிட விரும்பவில்லை” என இந்திய தேர்தல் அதிகாரி அனுப் சந்திரா பாண்டே தெரிவித்துள்ளார்.

இந்த புதிய முயற்சி பலரால் பாராட்டப்பட்டு வருகிறது…

.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.