மோடி பிரதமரான பின் நாடு ரொம்ப மாறிடுச்சு.. இடதுசாரி தீவிரவாதத்தை விட மாட்டோம் – அமித்ஷா

ராய்பூர்: மோடி வந்த பிறகே இந்தியாவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு இருப்பதாக மக்கள் தன்னிடம் தெரிவித்தனர் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக சத்தீஸ்கர் தலைநகர் ராய்பூருக்கு சென்று இருக்கிறார்.

அங்கு தேசிய புலனாய்வு முகமையின் அலுவலகத்தை உள்துறை அமைச்சர் அமித்ஷா திறந்துவைத்தார். அவருடன் சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகேல் பாஜக மூத்த நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.

என்.ஐ.ஏ. அலுவலகங்கள்

விழாவில் பேசிய அமித்ஷா, “நாடு முழுவதும் மே 2024 ஆம் ஆண்டுக்குள் தேசிய புலனாய்வு முகமைக்கான (NIA) அலுவலகங்கள் தொடங்கப்படும். இடதுசாரி தீவிரவாதம், பயங்கரவாதம், கள்ள நோட்டுக்கள், போதை பொருள் கடத்தல் போன்றவற்றில் எந்த சகிப்புத்தன்மையையும் மோடி அரசு காட்டாது. காஷ்மீர் சிறப்பு சட்டம் நீக்கப்பட்ட பிறகு அங்கு அமைதி திரும்பி வருகிறது” என்று கூறினார்.

 மோடி குறித்த புத்தகம்

மோடி குறித்த புத்தகம்

இதனை தொடர்ந்து “MODI@20: Dreams Meet Delivery” என்ற பிரதமர் நரேந்திர மோடி குறித்த புத்தகம் குறித்த கருத்தரங்கில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்துகொண்டார். ராய்பூரில் உள்ள தீனதயாள் உபாத்யாய் கருத்தரங்கில் மாலை நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் பேசினார்.

நாட்டில் பெரும் மாற்றம்

நாட்டில் பெரும் மாற்றம்

அப்போது பேசிய அமித்ஷா, “நரேந்திர மோடி முதலமைச்சரான பிறகு நாட்டின் பெரிய ஏற்பட்டு இருப்பதாக பொதுமக்கள் என்னிடம் தெரிவித்து இருக்கின்றனர். இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு முதல் முறையாக கோடிக்கணக்கான ஏழை மக்கள் தங்கள் இருப்பை உணர்ந்து இருக்கின்றனர்.” என்றார்.

21 துறை வல்லுநர்கள்

21 துறை வல்லுநர்கள்

21 வகையான துறைகளை சேர்ந்த வல்லுநர்கள், பிரபலங்களிடம் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு குறித்து கருத்துக்கள் பெறப்பட்டு பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசியல் பயணத்தை மிகவும் நெருக்கமாக இருந்த பார்த்த அமித்ஷாவும் ஒரு கட்டுரையை எழுதி இருக்கிறார். இந்த புத்தகத்தை நாடு முழுவதும் பிரபலப்படுத்தும் பணிகளில் பாஜக இறங்கி இருக்கிறது.

Source Link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.