கான்ஸ்டபிள் டூ டிஎஸ்பி! 7 மாத குழந்தைக்கு தாயான பீகார் பெண்ணின் 7 வருட உழைப்பின் சாதனை!

7 மாதக் குழந்தையின் தாயான பாப்லி குமாரி பீகார் மாநில காவல்துறையின் கான்ஸ்டபிளாகவும் பணியாற்றி வந்த நிலையில், அம்மாநிலப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று வெகு விரைவில் காவல் துணைக் கண்காணிப்பாளராக அதாவது டிஎஸ்பியாக பதவியேற்க உள்ளார்.
“மனமிருந்தால் மார்க்கமுண்டு.” இது ஒரு பழைய பழமொழி. ஆனால் பீகார் மாநிலத்தின் பெகுசராய் மாவட்டத்தில் அம்மாநில காவல்துறையின் கான்ஸ்டபிளாக பணியாற்றி வரும் பாப்லி குமாரி இந்த பழமொழி இக்காலத்திற்கும் பொருந்தும் என்பதை நிரூபித்து இருக்கிறார். திருமணமாகி தற்போது கையில் 7 மாதக் குழந்தையுடன் இருக்கும் குமாரிக்கு, 2015 ஆம் ஆண்டு பீகார் மாநில காவல்துறையில் கான்ஸ்டபிள் பொறுப்பு கிடைத்துள்ளது.
Babli became DSP after passing BPSC, IAS and IPS officers said these things  in praise - Sarkaripro
இருப்பினும் பெரிய பதவியில் அமர வேண்டும் என்ற வெறியுடன், கான்ஸ்டபிளாக பணியாற்றிக் கொண்டே கடந்த 7 வருடங்களாக தொடர்ந்து தேர்வுக்கு பயிற்சிகளை மேற்கொண்டு தேர்வுகளை எழுதி வந்துள்ளார். அடுத்ததாக 2 முறை பீகார் மாநில பணியாளர் தேர்வாணையம் நடத்திய சிவீல் சர்வீஸ் தேர்வில் பாப்லி குமாரியால் வெற்றி பெற முடியவில்லை. இதையடுத்து பிபிஎம்சி நடத்திய அடுத்த சிவில் சர்வீஸ் தேர்வில் மூன்றாவது முறையாக பங்கேற்ற பாப்லி குமாரி, இம்முறை அனைத்து கட்டங்களிலும் வெற்றி பெற்று டிஎஸ்பி பணிக்கு தேர்வாகியுள்ளார். 7 வருட கனவு நனவானது எப்படி என்பது குறித்து பாப்லி குமாரி தெரிவித்துள்ள கருத்துகள் பின்வருமாறு:
“எனது குடும்பத்தின் மூத்த மகளான நான் இளைய வயதிலேயே குடும்ப பொறுப்புகளை ஏற்றுக்கொண்டேன். அதனால் அரசு வேலை தேடிக்கொண்டிருந்தேன். 2015-ம் ஆண்டு பீகார் காவல்துறையில் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டேன். இருப்பினும், வேறு அரசுப் பணிக்காக முயற்சி செய்து கொண்டே இருந்தேன். அதனால், எனது மூன்றாவது முயற்சியில் பிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற முடிந்தது,
Bihar's police force boasts the largest share of female cops in the  country, here's how it happened - Special Report News - Issue Date: Mar 22,  2021
திருமணான பின்னர் என் கணவர் என்னைக் கட்டுப்படுத்திக் கொள்ளும்படி என்னிடம் ஒருபோதும் கேட்கவில்லை, அவர் எப்போதும் என்னை முன்னேறத் தூண்டினார், இப்படித்தான் அவர் எனது முன்னேற்றத்தில் முக்கியப் பங்கை ஆற்றினார். தங்கள் மகள்கள் அல்லது மருமகள்கள் உயர் படிப்பைத் தொடர அவர்களை ஊக்குவிக்க வேண்டும் என்று அவர்களது பெற்றோர்களிடமும் அவர்களது பாதுகாவலர்களிடம் நான் வேண்டுகோள் விடுக்கிறேன்” என்று அவர் கூறினார்.
बिहार की बेटी को सलाम: जो कांस्टेबल से बन गई DSP, 7 महीन की बेटी को गोद में  लेकर करती थी ड्यूटी
பாப்லி குமாரியை பெகுசராய் காவல் கண்காணிப்பாளர் யோகேந்திர குமார் வெகுவாகப் பாராட்டினார். அவரது சாதனை குறித்து குமார் பேசுகையில், “ஒரு பெண் காவலர் பணியில் இருந்தபோது பிபிஎஸ்சி தேர்வில் தேர்ச்சி பெற்றது எங்களுக்கு பெருமையான தருணம். அவள் விரைவில் ராஜ்கிரில் பயிற்சிக்காகப் புறப்படுவாள். குமாரியின் சாதனை, திருமணமான பெண்களுக்கு, வீட்டுப் பொறுப்புகளை மீறி உயரத்தை அடைய வேண்டும் என்ற கனவிற் தொடர்ந்து ஊக்கமளிக்கும் என்று நம்புகிறேன்” என்று குறிப்பிட்டார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.