தஞ்சைவூர்- பட்டுக்கோட்டை சாலையில் 50 கிலோமீட்டர் தூரத்திற்குள் இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்கள் இருக்கின்றன. இந்த கிராமங்களில் வசிக்கும் மக்கள் பள்ளி, கல்லூரி, அலுவலகம் என அனைத்திற்கும் பட்டுக்கோட்டை அல்லது தஞ்சை பகுதிக்கு தான் வர வேண்டும்.
இப்படி வரும் மக்கள் பெரும்பாலும் பஸ் பயணங்களை தான் மேற்கொள்கின்றனர். தஞ்சாவூரில் இருந்து பட்டுக்கோட்டை செல்ல பஸ் கட்டணம் ரூ.36 ஆகும். இருப்பினும், 90 சதவீத அரசு பேருந்துகளில் ₹.45 ரூபாய் வசூல் செய்யப்படுகின்றது. காப்பீடு மற்றும் சுங்கவரி என்று கூறி மேலும் 9 ரூபாய் வசூலிப்பதாக பயணிகள் புகார் கூறியுள்ளனர்.
இது பற்றி பயணிகள், “தனியார் மற்றும் அரசு பேருந்துகளில் கட்டணம் வெறும் ரூ.36 தான். இருப்பினும், கும்பகோணம் கோட்ட அரசு பேருந்துளில் காப்பீடு மற்றும் சுங்கவரி என 9 ரூபாய் அதிகமாக்கி ரூ.45 கட்டணம் பெறுகின்றனர். தஞ்சாவூர் – பட்டுக்கோட்டை சாலையில் சுங்கசாவடியே இல்லை. அதிலும், தஞ்சை மாவட்டத்தில் எங்குமே சுங்கச்சாவடி இல்லை.
அப்படி இருக்கையில் பயணிகளை ஏமாற்றி இல்லாத டோல்கேட்டுக்கு கட்டணம் வசூலிக்கிறார்கள். ஒரு நாளைக்கு இந்த பாதையில் ₹.1000 மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். இது போல கட்டணம் வசூலிக்கும் காரணத்தால் பயணிகள் புலம்புகிறார்கள். இது பெரிய மோசடி நடக்கிறதா என்று நினைக்க வைக்கிறது.? இது குறித்து தமிழக அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.