மும்பை: தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டாவின் லைகர் படம் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.
பான் இந்தியா படமாக வெளியான ‘லைகர்’ மிகப் பெரிய தோல்வியை சந்தித்துள்ளது.
‘லைகர்’ படத்தின் தோல்விக்கு விஜய் தேவரகொண்டா தான் காரணம் என புதிய சர்ச்சை எழுந்துள்ளது.
சவால் விட்ட விஜய் தேவரகொண்டா
பூரி ஜெகன்நாத் இயக்கியுள்ள லைகர் படத்தில்,. விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, மைக் டைசன், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். குத்துச் சண்டை பின்னணியில் ஸ்போர்ட்ஸ் டிராமா படம் என கூறப்பட்ட லைகர், மிகப் பிரம்மாண்டமாக உருவானது. இதனால் ரசிகர்களின் அதிக எதிர்பார்ப்போடு, நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது. பான் இந்தியா படமாக தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் வெளியான லைகர், படுதோல்வியை சந்தித்துள்ளது.
பாய்காட்டுக்கு எதிராக முழக்கம்
முன்னதாக லைகர் படத்தின் ப்ரோமோஷன் நிகழ்ச்சிகளில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே இருவரும் தொடர்ச்சியாக பங்கேற்று வந்தனர். அப்போது அமீர்கான், டாப்ஸி. அக்சய் குமார் ஆகியோரின் படங்களை நெட்டிசன்கள் பாய்காட் செய்து வந்தனர். இதுகுறித்து கருத்து தெரிவித்த விஜய் தேவரகொண்டா, பாய்காட் குறித்து மிகவும் காட்டமாக பதிலளித்தார். மேலும், நெட்டிசன்களையும் அவர் கடுமையாக சாடியிருந்தார். இதனால், லைகர் படத்தையும் நெட்டிசன்கள் பாய்காட் செய்யத் தொடங்கினர்.
ஆப்பு வச்ச நெட்டிசன்கள்
இந்நிலையில், நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியான ‘லைகர்’ திரைப்படம் படுதோல்வியடைந்துவிட்டதாக சொல்லப்படுகிறது. லைகர் விஜய் தேவரகொண்டாவின் முதல் பான் இந்தியா படம் என்பதால் அதிகம் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், நெட்டிசன்கள் தொடர்ந்து பாய்காட் செய்து வந்ததால், ரிலீஸான இடத்திலேயே படுத்துவிட்டது லைகர். இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்ற விஜய் தேவரகொண்டா யாரையும் சந்திக்கவில்லை எனத் தெரிகிறது.
குற்றம்சாட்டும் தியேட்டர் ஓனர்
லைகர் திரைப்படம் இதுவரை 38 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது எதிர்பார்த்ததை விட ரொம்பவே குறைவு என விநியோகஸ்தர்கள் கூறி வருகின்றனர். இந்நிலையில், லைகர் தோல்விக்கு விஜய் தேவரகொண்டாவின் திமிரு தான் காரணம் என, கெய்ட்டி கேலக்ஸி, மராத்தா மந்திர் போன்ற மல்டிபிளக்ஸ் திரையரங்குகளின் ஓனர் மனோஜ் தேசாய் குற்றம்சாட்டியுள்ளார். மேலும், விஜய் தேவரகொண்டா தன்னை புத்திசாலி என நினைத்துக்கொண்டு பேசுகிறார். அவரைப் போல் பேசிய அமீர்கான், டாப்ஸி, அக்சய் குமார் ஆகியோருக்கு என்ன நடந்தது என அவர் பார்க்கவில்லையா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஓடிடியில் நடிக்க போங்க
மேலும், “இதுபோன்று திமிர்த்தனமாக நடந்துகொள்வதாக இருந்தால், ஓடிடி தளங்கள் தயாரிக்கும் படங்கள், வெப் சீரிஸ்களில் மட்டும் நடித்துவிட்டு போகலாம். இப்படி திரையரங்குகளின் வருமானத்தில் சிக்கலை ஏற்படுத்த வேண்டாம். நீங்கள் ஒன்றும் அனகோண்டா இல்லை, வெறும் விஜய் தேவரகொண்டா மட்டும் தான்” என காட்டமாக விமர்சித்துள்ளார். விஜய் தேவரகொண்டாவின் ஆணவப் பேச்சால், இப்போது லைகர் வசூல் பாதிக்கப்பட்டதையே மனோஜ் தேசாய் இப்படி சுட்டிக்காட்டி விமர்சித்துள்ளார். அவரின் இந்த விமர்சனம் திரையுலகைச் சேர்ந்தவர்களின் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.