நாகப்பட்டினம் மீனவர்கள் 9 பேரை விடுதலை செய்து இலங்கை நீதிமன்றம் உத்தரவு

ராமேசுவரம்: நாகை மாவட்டம் கீச்சாங்குப்பத்தைச் சேர்ந்த நரேந்திரனுக்கு சொந்தமான விசைப் படகில்அக்கரைப்பேட்டை காமராஜ்(40), பூவரசன்(22), செல்லையன்(52), அன்பு(32), பாலு(36), செல்லதுரை(35), முருகானந்தம்(42), ஸ்டீபன்(25), முருகன்(24) ஆகியோர் மீன்பிடிக்கச் சென்றனர்.

முல்லைத்தீவு கடற்பகுதியில் ரோந்து சென்ற இலங்கை கடற்படையினர், கடந்த 10-ம் தேதிதமிழக மீனவர்களை கைது செய்து, திருகோணமலை சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு, திருகோணமலை நீதி மன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கைவிசாரித்த நீதிபதி, 9 மீனவர்களும் இலங்கைஎல்லைக்குள் மீண்டும் மீன்பிடித்தால் 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையில், அவர்களை விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.