ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித்தொடரின் முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.
15 ஆவது ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் இன்று (27) ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஆரம்பமாகியது இன்று நடைபெற்ற முதலாவது போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி ,இலங்கை அணியை எதிர்கொண்டது.
ஆசிய வெற்றிக்கிண்ண போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் இன்று முதல் செப்டம்பர் 11-ந் திகதி வரை நடக்கிறது. இதில் பங்கேற்கும் 6 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியா, பாகிஸ்தான், ஹாங்காங் அணிகளும், ‘பி’ பிரிவில் இலங்கை, வங்காளதேசம், ஆப்கானிஸ்தான் அணிகளும் இடம் பெற்றுள்ளன.
முதலாவது போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 19.4 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுக்களையும் இழந்து 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
பானுக ராஜபக்க்ஷ 38 ஓட்டங்களையும் சமிக கருணாரத்ன 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் பரூகி 3 விக்கட்டுக்களையும், முஜீப் ரஹ்மான் மற்றும் நபி ஆகியோர் தலா இவ்விரண்டு விக்கட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.
106 என்ற இலகுவான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான குர்பாஸ் மற்றும் ஹஸ்ரதுல்லா ஆகியோரின் அதிரடி காரணமாக 10.1 ஓவர்கள் நிறைவில் 2 விக்கட்டினை மாத்திரம் இழந்து வெற்றி இலக்கை அடைந்தது.