வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
இஸ்லாமாபாத்,-மழை, வெள்ளத்தால் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் மீட்புப் பணிகளுக்காக ராணுவத்தை அழைக்க பாக்., அரசு முடிவெடுத்துள்ளது.
நம் அண்டை நாடான பாகிஸ்தானில் ஜூன் மாதத்தில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மழை, வெள்ளத்தில் சிக்கி இதுவரை 982 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த 1,456 பேருக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. நாடு முழுதும் மூன்று கோடி பேருக்கும் மேற்பட்டோர் வீடுகளை இழந்து தவிக்கின்றனர். ஆங்காங்கே நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.
149 பாலங்கள் முற்றிலும் தகர்ந்தன. இதுவரை 3,161 கி.மீ., சாலை சேதம் அடைந்துஉள்ளது. தேசிய பேரிடர் மீட்புப் படையினர் வெள்ளத்தில் சிக்கித் தவிப்பவர்களை மீட்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பேரழிவு காரணமாக, பாகிஸ்தானில் மழை அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு ராணுவத்தின் உதவியை கோரியுள்ளதாக உள்துறை அமைச்சர் ரானா சனாவுல்லா நேற்று தெரிவித்தார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement