துபாய்,
15-வது ஆசிய கோப்பை போட்டி துபாய் மற்றும் சார்ஜாவில் செப்டம்பர் 11-ந்தேதி வரை நடக்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் இன்று விளையாட உள்ளன. இதில், விளையாடும் இந்திய வீரர் விராட் கோலி தனது 100-வது டி20 கிரிக்கெட் போட்டியை விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் குறித்த கேள்விக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸில் பேசிய விராட் கோலி கூறியதாவது ;
2019 ஒருநாள் உலக கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் போட்டிக்கு பின்னர் தான் பாபர் அசாமை முதல் முறையாக சந்தித்து பேசினேன். இருவரும் நீண்டநேரம் விளையாட்டு குறித்து அமர்ந்து பேசினோம். மிகவும் நல்ல குணம் வாய்ந்த வீரர் .அணைத்து வடிவகிரிக்கெட்டிலும் பாபர் அசாம் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் .அவர் இதற்கெல்லாம் தகுதியானவர். உலக கிரிக்கெட்டை உற்சாகமாக வைத்திருக்க அவரைப் போன்ற வீரர்கள் இருக்க வேண்டும்,” என்று கூறினார்.