வாழதுடிக்கும்..வாழ்ந்து முடித்த ஒரு மனிதனின் கதை..மாமனிதன் படத்தை பாராட்டிய தமிழச்சி தங்கபாண்டியன்!

சென்னை : விஜய் சேதுபதி நடிப்பில் உருவான மாமனிதன் திரைப்படத்தை பார்த்த திமுக பெண் எம்பி தமிழச்சி தங்கபாண்டியன் பாராட்டி உள்ளார்.

இயக்குநர் சீனுராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த ஜூன் 24ந் தேதி திரையரங்குகளில் வெளியான படம் ‘மாமனிதன்’.

காயத்ரி, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்தப் படத்தை யுவன் சங்கர் ராஜா தயாரித்து இசையமைத்திருந்தார்.

மாமனிதன்

சீனு ராமசாமி, விஜய் சேதுபதி கூட்டணியில் மூன்றாவதாக வெளியான படம் மாமனிதன். இப்படத்திற்கு குடும்ப ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. ரஜினிகாந்த், ஷங்கர், பாரதிராஜா உள்ளிட்ட திரை பிரபலங்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் பலரும் மாமனிதன் படத்தை பாராட்டியிருந்தனர்.

தமிழச்சி தங்கபாண்டியன்

தமிழச்சி தங்கபாண்டியன்

இந்தநிலையில் மாமனிதன் படத்தை பாராட்டியுள்ள திமுக எம்.பி, தமிழச்சி தங்கபாண்டியன், மாமனிதன் படத்தை ஆஹா ஓடிடியில் பார்த்தேன். அன்றாடம் நாம் சந்திக்கும் மனிதர்களின் வாழ்வே கதைக்களம். வழமையான சீனுராமசாமி படங்களைப்போலவே எதார்த்த பாணியில் கதை சொல்லல்தான். என்ன பெரிதாக அல்லது புதிதாக இதில் எனச் சற்று விட்டேத்தியாக நம்மை சாய்ந்து உட்கார வைக்கும் நிகழ்வுகளுடன் தான் படம் தொடங்குகிறது.

அசாதாரண செய்தியல்ல

அசாதாரண செய்தியல்ல

ஆனால், சமகாலத்தில் வாழ்வில் தனக்கான ஒரு எளிய அறமுடன் வாழதுடிக்கும் வாழ்ந்து முடிக்கும் ஒரு மனிதனின் கதையாக விரியும்போது ஈர்ப்பின் விம்மலுடன் சற்று நிமிர்கிறோம். சின்னச்சிறு கூட்டில் பேராசையின்றி அன்றாட வாழ்வை நகர்த்தும் ஒரு குடும்ப தலைவனின் அகலகால் முயற்சி அதளபாதாளமாவது சமயங்களில் அது ஒட்டுமொத்த குடும்பத் தற்கொலைகளில் முடிவது நமக்கு அசாதாரண செய்தியல்ல

வாழ்த்துகள் அன்பு சீனு

வாழ்த்துகள் அன்பு சீனு

வசனங்கள் தான் சீனுவின் பலம். விஜய் சேதுபதிக்கு அயிரை மீன்களைப் பாலில் எளிதாக கழுவுவதைப்போல கதைநாயகன் வேலை. மகனது அநியாயச் செயலுக்குப் பிராயச்சித்தமாகத் தன் கழுத்துச் சங்கிலியைக் கழட்டித் தந்தபடி உணவு பரிமாறும் அம்மாவின் கைகளின் நடுக்கமே சீனு ராமசாமியின் கதையின் ஆன்மாவை நமக்குக் கடத்துமிடம். வாழ்த்துகள் அன்பு சீனு – வணிகச் சமரசமற்று வாழ்வின்கீற்றுகளைத் தான் நம்பும் அறத்தின் வழியில் படைத்தமைக்கு என தெரிவித்துள்ளார்.

இலக்கிய மனுசி

இலக்கிய மனுசி

அவருக்கு நன்றி தெரிவித்துள்ள இயக்குநர் சீனுராமசாமி, ”மாமனிதன் திரைப்படம் பார்த்து மடல் தந்த இலக்கிய மனுசி, அம்மாவுக்கு அன்பும் வணக்கமும்” என்று தனது சீனுராமசாமி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.