Tamil news today live:உத்தரபிரதேசம்: இன்று இடிக்கப்படுகிறது நொய்டா இரட்டை கோபுரங்கள்

பெட்ரோல் – டீசல் விலை

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63-க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.94.24-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மீண்டும் வெள்ளப்பெருக்கு

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால் நீர்வரத்து உயர்ந்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 1.45 லட்சம் கன அடியாக அதிகரிப்பு ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பாரதிராஜா- முதல்வர் நலம் விசாரிப்பு

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இயக்குநர் பாரதிராஜாவின் உடல் நலம் குறித்து விசாரித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.  பாரதிராஜாவின் மனைவியிடம் தொலைபேசியில் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Live Updates
08:36 (IST) 28 Aug 2022
இரட்டை கோபுரம் ; மக்கள் வெளியேற்றம்

இன்று பிற்பகலில் இரட்டை கோபுரம் தகர்க்கப்பட உள்ளதால் முன்னெச்சரிக்கையாக பொதுமக்கள் வெளியேற்றம்.

08:35 (IST) 28 Aug 2022
இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுகிறது

நொய்டாவில் விதி மீறி கட்டப்பட்ட இரட்டை கோபுரம் இன்று தகர்க்கப்படுகிறது. பிரமாண்ட கட்டடத்தை வெடிவைத்து தகர்ப்பதற்கான முன்னேற்பாடுகள் தயார் நிலையில் உள்ளது. கோபுரங்களை இடிக்க 3,700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட உள்ளது.

08:15 (IST) 28 Aug 2022
காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம்

பரபரப்பான அரசியல் சூழலில் இன்று காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டம் .காங்கிரஸ் தலைவர் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து ஆலோசனை . வெளிநாட்டில் உள்ள சோனியா காந்தி, ராகுல் காந்தி காணொலி வாயிலாக பங்கேற்பு.

08:14 (IST) 28 Aug 2022
மீனவர்கள் 6 பேர் கைது

எல்லை தாண்டி மீன் பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 6 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.

08:14 (IST) 28 Aug 2022
ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் ; இந்தியா வருகை

ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் தலைவர் அப்துல்லா ஷாகித் இன்று இந்தியா வருகிறார். 2 நாள் சுற்றுப்பயணத்தில் குடியரசு தலைவர் உள்ளிட்டோரை சந்திக்கிறார் .

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.