அமெரிக்காவின் பிடி இந்த 5 நாடுகளிடத்தில்.. எப்படி தெரியுமா?

உலக நாடுகள் பலவும் இன்று மெதுவான வளர்ச்சிக்கு மத்தியில் பல சவாலான நிலையை எதிர்கொண்டு வருகின்றன. பல நாடுகளும் அண்டை நாடுகளை எதிர்பார்க்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன.

இப்படி எதிர்பார்க்கும் நாடுகள் பல வகையிலும் கடன் திரட்டுவது உண்டு. உதாரணத்திற்கு கடன் பத்திரங்கள், பங்குகள், தனியார்மயம், வெளிநாட்டு கடன் என பல வகையிலும் வாங்குகின்றன.

குறிப்பாக கடன் பத்திரங்களை வெளியிடுவதன் மூலம் பெரியளவில் கடனை திரட்டுகின்றன. அப்படி அமெரிக்காவினால் வெளியிடப்பட்ட கடன் பத்திரங்களை அதிகம் வாங்கியுள்ள நாடுகள் எது தெரியுமா? எவ்வளவு வாங்கியிருக்கிறார்கள் தெரியுமா? வாருங்கள் பார்க்கலாம்.

தனிநபர் கடன் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை.. இந்த 5 விஷயங்கள் முக்கியம்!

ஜப்பான் தான் டாப்

ஜப்பான் தான் டாப்

அமெரிக்காவின் கடன் பத்திரங்களை அதிகம் பெற்றுள்ள 5 நாடுகளை பற்றி காணலாம்.

அமெரிக்காவிடம் அதிக கடன் பத்திரங்களை பெற்றுள்ள 5 நாடுகளில் ஜப்பான் முதலிடத்தில் உள்ளது. தன்னுடைய மொத்த ஹோல்டிங்கில் 17.01% அமெரிக்காவிடம் வைத்துள்ளது. இதன் மதிப்பு 1212.8 பில்லியன் டாலர் ஆகும். ஜப்பான் அதன் ஜிடிபியில் அதிக கடன் பெற்றுள்ள நாடுகளில் முதலிடத்தில் இருந்தாலும், முதலீட்டிலும் முதலிடத்தில் தான் உள்ளது.

 

சீனா

சீனா

அமெரிக்கா சீனா இடையேயான பிரச்சனைகள் பதற்றங்கள் பலவும் இருந்தாலும், அமெரிக்காவின் மொத்த கடன் பத்திர முதலீட்டில் 13.76% சீனாவிடம் உள்ளது. இதன் மதிப்பு 980.8 பில்லியன் டாலர்களாகும். கடந்த சில ஆண்டுகளாகவே தொடர்ந்து தனது பொருளாதாரத்தினை சீனா விரிவுப்படுத்த முயன்று வரும் ஒரு நாடாக இருக்கிறது. அதன் பின்னணியில் இப்படியும் ஒரு முதலீட்டினை, அதனையும் அமெரிக்காவில் வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்து
 

இங்கிலாந்து

இந்த பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருப்பது இங்கிலாந்து ஆகும். இங்கிலாந்தின் மொத்த கடன் பத்திர இருப்பில் 8.89% அமெரிக்காவிடம் உள்ளது. இதன் மதிப்பு 634 பில்லியன் டாலராகும். இன்று பணவீக்க பிரச்சனையால் பெரும் பிரச்சனையை எதிர்கொண்டு வரும் இங்கிலாந்து, முதலீட்டிலும் கவனம் செலுத்தியுள்ளது இதன் மூலம் தெரிய வந்துள்ளது.

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து

சுவிட்சர்லாந்து வசம் 4.13% அமெரிக்க கடன் பத்திரங்கள் உள்ளன. இதன் மதிப்பு 294.1 பில்லியன் டாலராகும். பொதுவாக மற்ற அண்டை நாடுகளும் அண்டை நாட்டு பணக்காரர்களும் சுவிஸ் வங்கியில் முதலீடு செய்வது வழக்கம். ஆனால் சுவிட்சர்லாந்தே அமெரிக்காவிடம் இத்தகைய முதலீடினை செய்துள்ளது குறிப்பிடத்தகக்கது.

கெய்மன் தீவுகள்

கெய்மன் தீவுகள்

இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருப்பது கெய்மன் தீவு ஆகும். கெய்மன் தீவிடம் 4.11% பங்கு கடன் பத்திரங்கள் அமெரிக்காவில் உள்ளது. இதன் வசம் உள்ள அமெரிக்க கடன் பத்திரத்தின் மதிப்பு 293.2 பில்லியன் டாலராகும். இதில் துரதிஷ்டவசமான கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில் இந்த பட்டியலில் இந்தியா இல்லை என்பது தான்.

இந்த நாடுகள் ஒரு சேர விற்பனை செய்ய நினைத்தால் அது அமெரிக்காவுக்கு பிரச்சனை என்பதும் கவனிக்க வேண்டிய விஷயம் ஆகும்.

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: top 5 debt கடன்

English summary

Top 5 countries hold the most US treasury holdings?

Top 5 countries hold the most US treasury holdings?/அமெரிக்காவின் பிடி இந்த 5 நாடுகளிடத்தில்.. எப்படி தெரியுமா?

Story first published: Sunday, August 28, 2022, 10:27 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.