பாகிஸ்தானில் 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பெய்த கனமழையால் உருவான வெள்ளத்துக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை தாண்டியுள்ளது.
ஜூன் 14ம் தேதி முதல் பெய்த கனமழையால் மொத்தமுள்ள 110 மாவட்டங்களில் 72 மாவட்டங்களை வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இதுவரை 3 கோடியே 30 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 9 லட்சத்து 48 ஆயிரம் வீடுகள் இடிந்து தரைமட்டானது.
மேலும், 149 பாலங்கள், 170 வணிக வளாகங்கள் இடிந்த விழுந்த நிலையில், 3 ஆயிரத்து 451 கிலோ மீட்டர் தொலைவிலான சாலைகள் சேதமடைந்தன.