உணவு மற்றும் பிற வீட்டு உபயோக பொருட்களை டெலிவரி செய்யும் ஆன்லைன் தளமான ஸ்விக்கி கோவை வாடிக்கையாளருக்கு அதிர்ச்சி அளித்துள்ளது. ஸ்விக்கி என்னும் ஆன்லைன் உணவு டெலிவரி நிறுவனம், உணவுகளுடன், அன்றாட தேவைகளான், பால், காய்கறிகள், மளிகை சாமான் உள்ளிட்ட பல பொருட்களையும் டெலிவரி செய்யும் சேவை வழங்கி வருகிறது. இந்நிலையில், கோவை மாவட்டத்தில் பத்திரிக்கையாளராக பணியாற்று வருபவர் ஸ்விக்கியில் சில பொருட்களை ஆர்டர் செய்திருந்தார் .
நேற்று இவர் உணவு டெலிவரி செய்யும் நிறுவனமான ஸ்விக்கியில் தனது குழந்தைகளுக்காக ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸை ஆர்டர் செய்துள்ளார். ஆனால் இவருக்கு வந்த பார்சலில் ஐஸ்கிரீம் மற்றும் சிப்ஸுக்கு பதிலாக ஆணுறை இருந்துள்ளது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த அவர் அதனை புகைப்படம் எடுத்து அவரது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு ஸ்விக்கியிடம் கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரி பணத்தை திருப்பி அளிப்பதாக கூறியுள்ளது.
உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இது போன்று பொருட்கள் டெலிவரி செய்யப்பட்டது மக்களிடையே அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது. மேலும் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் இருந்து ஆணுறை எவ்வாறு வந்தது எனவும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.