ரஷ்யா உக்ரைன் இடையேயான பிரச்சனைக்கு மத்தியில், இந்தியா ரஷ்யாவில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வது மிக நல்ல விஷயமாக பார்க்கப்பட்டாலும், ஏற்றுமதி சரிவினைக் கண்டுள்ளது.
இந்தியாவின் ஏற்றுமதி விகிதமானது உக்ரைன் பிரச்சனைக்கு முன்பை விட, 38% சரிவினைக் கண்டுள்ளது. அதேசமயம் இறக்குமதியானது 369% அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக ரஷ்யாவுடனான வர்த்தக பற்றாக்குறை என்பது மிகப்பெரிய அளவில் அதிகரித்துள்ளது.
சர்வதேச ரெசசனை இந்தியா தோற்கடிக்குமா.. ஏற்றுமதி என்னவாகும்?
விரிவடைந்த வர்த்தக பற்றாக்குறை
கடந்த ஜூன் காலாண்டில் வர்த்தக பற்றாக்குறை என்பது 8.8 பில்லியன் டலாராக அதிகரித்துள்ளது. இது கடந்த நிதியாண்டு முழுவதிலுமே 6.6 பில்லியன் டாலராக இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகியுள்ளன. ஏற்றுமதி 0.4 பில்லியன் டாலராக இருந்த போதில், இறக்குமதி 9.3 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளது.
செலவுகள் அதிகரித்துள்ளன?
சர்வதேச அளவில் நிலவி வரும் நெருக்கடியான நிலைக்கு மத்தியில் கொள்கலன் பற்றாக்குறையும் இருந்து வருகின்றது. இதனால் ஏற்றுமதி தாமதமாகி வருகின்றது. அதோடு முன்பை விட இன்சூரன்ஸ் கட்டணங்களும் அதிகரித்துள்ளன. மற்ற செலவினங்களும் அதிகரிள்ளன. இதனால் சிறியளவிலான ஏற்றுமதி விகிதமானது சரிவினைக் கண்டுள்ளது.
பேமெண்ட் பிரச்சனை
மேலும் தற்போது பேமெண்ட் பரிவர்த்தனையிலும் சவால் நிலையே இருந்து வருகின்றது. இதுவும் ஏற்றுமதியில் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மாதம் ரிசர்வ் வங்கி ரூபாயில் பரிவர்த்தனை செய்ய அனுமதி கொடுத்தது. எனினும் இதுவரையில் செயல்பாட்டுக்கு வரவில்லை என்பதால், இதன் பலன் இன்னும் முழுமையாக ஏற்றுமதியாளர்களுக்கு கிடைக்கவில்லை எனலாம்.
வாய்ப்பிருந்தும் பயன்படுத்திக் கொள்ள முடியவில்லை
உக்ரைன் பிரச்சனைக்கு பிறகு ரஷ்யாவின் தேவை அதிகரித்துள்ளது. இந்திய ஏற்றுமதியாளர்களிடம் பல்வேறு வகையான பொருட்களுக்கு வாய்ப்பு இருப்பதாக ஆர்வம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த நல்ல வாய்ப்புகளை இந்தியாவினால் பயன்படுத்திக் கொள்ள முடியாத சூழலே இருந்து வருகின்றது.
செலவு அதிகரிப்பு
இருப்பினும் இந்தியாவின் அத்தியாவசிய தேவையாக இருக்கும் கச்சா எண்ணெய் இறக்குமதி அதிகரித்துள்ளதே இத்தகைய நிலைக்கு காரணம் என்பதையும் மறுக்க முடியாது எனலாம். எனினும் ஷிப்பிங் செலவு, இன்சூரன்ஸ், கொள்கலன் என பல செலவுகளும் உயர்ந்துள்ளதால், அதன் பலனும் பெரியளவில் இந்தியாவுக்கு கிடைக்காமல் போகிறது.
இந்தியாவின் ஏற்றுமதி
எனினும் கடந்த ஜூன் காலாண்டில் ரஷ்யாவுக்கு மருந்து பொருட்கள் ஏற்றுமதியானது 19% அதிகரித்தும், அதனை தொடர்ந்து ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஏற்றுமதி 13% அதிகரித்தும் கேப்பிட்டல் குட்ஸ் 8% அதிகரித்துள்ளது, அதேசமயம் ரஷ்யாவில் இருந்து எரிபொருட்கள் இறக்குமதியானது 89% அதிகரித்துள்ளது.
India’s trade deficit with Russia increased to 8.8 billion dollar in june quarter
India’s trade deficit with Russia increased to 8.8 billion dollar in june quarter/மண்ட மேல இருக்கும் கொண்டைய மறந்த இந்தியா.. ரஷ்யாவால் இப்படி ஒரு பிரச்சனையா?