நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி, கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
ஹரியானா மாநிலத்தைச் பாஜக பிரமுகர், டிக்டாக் மற்றும் பிக்பாஸ் பிரபலம் உள்பட பன்முகத்தன்மை கொண்ட சோனாலி போகட் (42), கடந்த 22-ம் தேதி கோவாவுக்கு சுற்றுலா சென்றார். மறுநாள் இவர் மர்மமான முறையில் இறந்தார். சோனாலி போகட் மாரடைப்பால் இறந்ததாக முதலில் கூறப்பட்டது. ஆனால், அவரது குடும்பத்தினர் சோனாலியின் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பல்வேறு குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் அவர் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் கோவா போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சோனாலி போகாட் மரண வழக்கில் இதுவரை 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக சோனாலி போகட்டின் உடற்கூராய்வு பரிசோதனையில் அவரது உடலில் பல இடங்களில் காயங்கள் இருப்பது தெரிய வந்தது. இதனால் சோனாலி போகட் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் வலுத்துள்ளது. மேலும் சோனாலி பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்டாரா என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், நடிகை சோனாலி மரண வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய வலியுறுத்தி, கோவா அரசுக்கு ஹரியானா முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
இதையும் படிக்க: சோனாலி போகட் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை? – கோவா கிளப் உரிமையாளர் கைதுSource : WWW.PUTHIYATHALAIMURAI.COM