மறைந்த அதிமுக நிர்வாகி தனசேகரின் நினைவு கோப்பை கால்பந்து போட்டியினை முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். அதோடு வீரர்களுடன் கால்பந்தாடி மகிழ்ந்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ‘பணம் கொடுத்து கட்சிக்கு ஆள் சேர்க்கும் நடவடிக்கையில் பன்னீர்செல்வம் ஈடுபட்டு வருவதாக தெரிவித்த அவர், அதிமுக என்ற கட்சி தலைவர்களை நம்பியோ, சட்டமன்ற உறுப்பினர்களை நம்பியோ, எம்பிக்களை நம்பியோ ஆரம்பிக்கப்படவில்லை என்றும், தொண்டர்களை நம்பித்தான் அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கினார் என்றும் கூறினார்.
பன்னீர்செல்வத்தின் நடவடிக்கை குறித்து விமர்சித்த டி ஜெயக்குமார், உத்தமன் போல பேசும் மகா நடிகன் என்றும், இவர் நடிகனாக இருந்திருந்தால் ரஜினி, சிவாஜியை தோற்கடித்து ஆஸ்கர் விருதை பெற்று இருப்பார் என்றும் விமர்சித்தார்.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற பொது தேர்தலில் அதிமுக வெற்றி பெறக்கூடாது என்ற எண்ணத்தில் பன்னீர்செல்வத்தின் செயல்பாடு இருந்தது எனவும் அவர் குற்றம்சாடடினார்.
அதிமுகவை தோற்கடிக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் எடப்பாடி கே பழனிச்சாமி ஆட்சிக்கு எதிராக வாக்களித்த பன்னீர்செல்வத்துக்கும், டிடிவி தினகரன்,
ஆகியோருக்கும் அதிமுகவில் என்றுமே இடம் கிடையாது என்ற அவர், கரந்த பால் மடியேறாது என்றும், கருவாடு மீனாகாது என்றும் கூறினார்.
ஓ.பன்னீர்செல்வத்தின் செயல்பாடு அதிமுகவில் எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று கூறிய அவர், பன்னீர் மேற்கொள்வது மிரட்சி பயணம் என்று கூறினார். ஜெயலலிதா மரண அறிக்கையை வெளியிட வேண்டிய கடமை திமுக அரசுக்கு உண்டு என்று கூறிய ஜெயக்குமார், ஜெயலலிதா மரணம் குறித்து தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளிக்கும் சசிகலா விசாரணை ஆணையத்தில் ஆஜராகி சாட்சியமளிக்காத்து ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.