தெலுங்கில் அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் விஜய் தேவரகொண்டா. அந்தப் படத்துக்கு பிறகு விஜய் தேவரகொண்டாவுக்கு ரசிகர்கள் பெருகினர். மேலும், சமூக வலைதளங்களில் பல பெண்களின் க்ரஷ்ஷாகவும் மாறினார் அவர். அர்ஜுன் ரெட்டி படத்துக்கு பிறகு கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் என்று பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தமிழில் இவர் நடிப்பில் வெளியான நோட்டா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் இவர் நடித்திருந்த லைகர் படம் சில நாள்களுக்கு முன்பு வெளியானது. பான் இந்தியா படமாக வெளியான லைகரில் மைக் டைசனும் நடித்திருக்கிறார். படத்தை பார்த்த ரசிகர்கள் படம் ஏமாற்றிவிட்டதாகவும், படம் படு சுமார் எனவும் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
Enta maata.. ! Tera kosam character play chestamu..TV lo akkadiki anugunanga.. Movie lo akkadiki anugunanga.. meeru memu tera meeda chesevanni ma charater judgement to mudipettatam anyayamandi.. ammatamentandi?! #SayNOtoOnlineAbuse #StopAgeShaming https://t.co/dczYg2WzhU
— Anasuya Bharadwaj (@anusuyakhasba) August 27, 2022
இதற்கிடையே விஜய் தேவரகொண்டா ஒரு படத்துக்கு 7 கோடி ரூபாய்வரை சம்பளம் வாங்கிய சூழலில், லைகர் படத்திற்கு பிறகு தனது சம்பளத்தை ரூ.25 கோடியாக உயர்த்தி இருப்பதாகவும் கூறப்படுகிறது. பிற மொழிகளிலும் தனது படங்களுக்கு வரவேற்பு இருப்பதால் அதிக சம்பளம் கேட்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் நடிகையும், நிகழ்ச்சி தொகுப்பாளருமான அனசுயா விஜய் தேவரகொண்டாவின் ‘லைகர்’ படத்தை மறைமுகமாக கிண்டலடித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். இதனால் கோபமடைந்த விஜய் தேவரகொண்டா ரசிகர்கள், அனசுயாவை ‘ஆன்ட்டி’ என ட்ரோல் செய்ய தொடங்கினர். இந்த ஹேஷ்டேக் சமூக வலைதளத்தில் இந்திய அளவில் ட்ரெண்ட் ஆனது. இதனால் ஆத்திரமடைந்த அனசுயா, தன்னை ‘ஆன்ட்டி’ என விமர்சித்தால், அந்தப் பதிவுகளை ‘ஸ்கிரீன்ஷாட்’ எடுத்து வழக்குத் தொடுப்பேன் என்று எச்சரித்துள்ளார். மேலும் தன்னை ‘அக்கா’ என்றோ, ‘ஆன்ட்டி’ என்றோ அழைக்கக் கூடாது. அனசுயா என்றே அழைக்க வேண்டும் என கூறியுள்ளார்.