நொய்டா: பார்த்து பார்த்து பல வருடங்களாக கட்டப்பட்ட இரட்டை கோபுரங்கள் இன்று சில நொடிகளுக்குள் இடித்து தரை மட்டமாக்கப்பட்டது.
சூப்பர்டெக் கட்டுமான நிறுவனத்தால் கட்டப்பட்ட ஏபெக்ஸ் மற்றும் சியான் என்ற இரட்டை கோபுரங்கள், கட்டட விதிமுறைகளை மீறி கட்டப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது. இந்த நிலையில் தான் இன்று தகர்க்கப்பட்டது.
இது இந்தியாவில் தகர்க்கப்படும் மிகப்பெரிய கட்டிடங்களில் ஒன்றாகும். நொய்டாவில் 320 அடிக்கு உயர்ந்து நின்ற இந்த கட்டிடம் 30-க்கும் மேற்பட்ட அடுக்கு மாடிகளை கொண்டிருந்தது.
வெறும் 9 நொடி.. 40 மாடி கட்டிடம் தரைமட்டமாகும் : Supertech twin towers
அனுமதி எவ்வளவு தளங்களுக்கு?
இதில் ஏபெக்ஸ் கட்டிடத்தில் மொத்தம் 32 தளங்கள் இருந்தன. இதே சியானில் 29 அடுக்குகளும் இருந்தன . 2004ம் ஆண்டில் திட்டமிடப்பட இந்த கட்டிடத்தில் கட்டப்பட்டன. ஆரம்பத்தில் ஒரு கட்டிடத்தில் 14 தளங்களும், மற்றொரு தளத்தில் 9 தளமும் கட்டுவதற்கும் திட்டமிடப்பட்டது. எனினும் 2012ம் ஆண்டில் அந்த திட்டம் திருத்தப்பட்டு, 2 கட்டிடங்களிலும் 40 மாடிகள் வரையில் கட்டவும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது.
இடிக்க அனுமதி
எனினும் அப்போதே இது விதிமீறி கட்டப்பட்ட கட்டிடம் என்று வழக்குகளை விசாரித்த உயர் நீதிமன்றம், அதனை இடிக்க உத்தரவிட்டது. இது குறித்து மேல் முறையீடு செய்யப்பட்டிருந்த நிலையில், மீண்டும் தீர்ப்பு உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தான் இந்த கோபுரங்கள் இடித்து தகர்க்கப்பட்டன.
இடிக்க எவ்வளவு செலவு?
இந்த கட்டிடத்தை தகர்பதற்காக 3700 கிலோ வெடிமருந்துகள் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த இரட்டை கோபுரத்தினை கட்ட பல கோடி செலவிடப்பட்டிருக்கலாம். அது அனைவரும் அறிந்த ஒரு விஷயமே. ஆனால் இந்த இரட்டை கோபுரத்தை இடிக்க மட்டுமே கிட்டத்தட்ட 20 கோடி ரூபாய் செலவாகியுள்ளதாம்.
கட்டுமான செலவு?
9 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கட்டிடம் வெறும் 9 நிமிடங்களில் தகர்க்கப்பட்டுள்ளது.
நியூஸ் 18 அறிக்கையின் படி மொத்தம் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவு கொண்ட இந்த கட்டிடத்தை கட்ட, சதுர அடிக்கு 933 ரூபாய் ஆக, மொத்தம் 70 கோடி ரூபாய் செலவாகியிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மொத்தம் எவ்வளவு மாடி?
இந்த சூப்பர்டெக் எமரால்டு கோர்ட் திட்டத்தில் மூன்று அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் விலை சுமார் 1.13 கோடி ரூபாய் என்றும் கூறப்படுகின்றது. இந்த இரண்டு கட்டிடங்களில் மொத்தம் 915 அடுக்குமாடி குடியிருப்புகள் இருந்தன. இதன் மூலம் சுமார் 1200 கோடி ரூபாய் வருமானம் கிடைத்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளன.
வாடிக்கையாளர்களிடம் வசூல்
இந்த இரு கோபுரங்களிலும் மொத்தம் 915 மாடிகளில் 633 வீடுகள் முன்பதிவு செய்யப்பட்டிருந்தனவாம். இதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து 180 கோடி ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வாடிக்கையாளர்களிடம் இருந்து வசூல் செய்யப்பட்ட தொகைக்கு 12% வட்டியுடன் திரும்ப செலுத்தும் படியும் கேட்டுக் கொள்ளப்பட்டது.
பாதுகாப்புடன் இடிப்பு
இந்த இரட்டை கோபுரங்களின் அருகில் சுமார் 7000 பேர் வசித்து வருகின்றனர். இந்த கட்டிடத்தில் இருந்து சுமார் 30 அடி தூரத்திலேயே 12 மாடி கட்டிடம் ஒன்றும் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த இடிப்பு திட்டமிடப்பட்ட நிலையில், அங்கு சுற்றியுள்ள அனைவருமே வேறு இடங்களுக்கு பெயர்ந்து செல்ல கூறப்பட்டனர். மொத்தத்தில் பலத்த பாதுகாப்புகளுக்கு மத்தியில் கட்டிடம் இடித்து தகர்க்கப்பட்டது.
இது நொய்டா அதிகாரிகளுக்கும், சூப்பர்டெக் நிறுவனத்திற்கும் இடையேயான மோசமான உடந்தைக்கு மத்தியில் இந்த இடிப்பு, இதுபோன்ற விதிகளை கட்டுவோருகு ஒரு சரியான பாடம் எனலாம்.
Do you know cost of noida twin towers demolition?
Do you know cost of noida twin towers demolition?/நொய்டா இரட்டை கோபுரங்கள் கட்டுமான செலவு எவ்வளவு.. இடிப்பு செலவு எவ்வளவு தெரியுமா?