ஸ்ரீநகர்: இன்று நடைபெறும் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான ஆசிய கோப்பை போட்டியை கும்பலாக அமர்ந்து பார்க்கக்கூடாது என்று ஸ்ரீநகர் தேசிய தொழில்நுட்ப நிறுவனம் (என்.ஐ.டி) உத்தரவிட்டு இருக்கிறது.
இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை போன்ற தெற்காசிய நாடுகளை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களின் உயிர் மூச்சாக திகழ்கிறது கிரிக்கெட் போட்டி.
இந்தியாவின் தேசிய விளையாட்டாக ஹாக்கி இருந்தாலும் இந்தியர்களின் ஆஸ்தான விளையாட்டாக இருப்பது கிரிக்கெட்தான். என்னதான் உலகக்கோப்பை, ஐபிஎல் என பல தொடர்களை ரசிகள் கண்டுகளித்தால் அனைவரும் அதிகம் எதிர்பார்ப்பது ஒன்றைதான்.
இந்தியா – பாகிஸ்தான் போட்டி
அதுதான் இந்தியா – பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் போட்டி. பல்வேறு அரசியல் காரணங்களால் இருநாடுகளிடையே நேரடி தொடர் போட்டிகள் நடந்து 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிவிட்டன. உலகக்கோப்பை, ஆசிய கோப்பை போன்ற ஐசிசி தொடர் போட்டிகளில் மட்டுமே இரு அணிகளும் நேருக்கு நேர் மோதுகின்றன.
ஆசிரிய கோப்பை
கடந்த டி20 உலகக்கோப்பை போட்டிக்கு பிறகு இன்று இந்தியா – பாகிஸ்தான் அணிகள் ஆசியக்கோப்பை தொடரில் நேருக்கு நேர் மோதுகின்றன. இதற்காக காத்திருந்த இந்தியா, பாகிஸ்தான் ரசிகர்கள் இந்த போட்டியை காண தயாராகி வருகிறார்கள். இந்த நிலையில் இந்திய போட்டியை முன்னிட்டு ஜம்மு தலைநகர் ஸ்ரீநகர் என்ஐடி-யில் மாணவர்களுக்கு நிர்வாகம் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ஸ்ரீநகர் என்.ஐ.டி.
மாணவர்கள் விடுதிகளில் உள்ள அறைகளில் இருந்து வெளியேறக்கூடாது என்றும், மற்ற மாணவர்களை அறைகளுக்குள் அனுமதிக்கக்கூடாது என்றும், கும்பலாக அமர்ந்து இந்தியா – பாகிஸ்தான் போட்டியை காணக்கூடாது என்றும் கல்லூரி நிர்வாகம் உத்தரவிட்டு இருக்கிறது
மாணவர்களுக்கு கட்டுப்பாடு
மாணவர்களை இந்த கிரிக்கெட் தொடரை விளையாட்ட மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்கள் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்றும் என்.ஐ.டி. உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே அறையில் கும்பலாக அமர்ந்து கிரிக்கெட் பார்க்கும் மாணவர்கள் விடுதியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.
மீறினால் நடவடிக்கை
போட்டி முடிந்த பிறகு மாணவர்கள் விடுதி அறைகளை விட்டு வெளியேறக்கூடாது எனவும், போட்டியின் முடிவுகள் குறித்து சமூக வலைதளங்களில் பதிவிட கூடாது என்றும், விதிகளை மீறி செயல்படும் மாணவர்களுக்கு ரூ.5,000 அபராதம் விதிக்கப்படும் எனவும் என்.ஐ.டி. நிர்வாகம் எச்சரித்து இருக்கிறது. கடந்த 2016 டி20 உலகக்கோப்பை, கடந்த ஆண்டு டி20 உலகக்கோப்பையின்போது மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து இந்த உத்தரவை என்.ஐ.டி. பிறப்பித்துள்ளது.