பொதுவாக நடுத்தர மக்கள் மத்தியில் இன்றும் விருப்பமான முதலீடுகள் என்றாலே அது அஞ்சலக திட்டங்கள் தான். ஏனெனில் இவைகள் வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிக லாபம் கொடுக்கின்றன. கூடவே வரி சலுகையையும் கொடுகின்றன.
இதில் சந்தை அபாயம் என்பது இல்லை. எல்லாவற்றிற்கும் மேல் இறையாண்மை தன்மை கொண்ட நம்பிக்கையான முதலீடாகவும் பார்க்கப்படுகிறது.
குறிப்பாக அரசு பத்திரங்கள், வங்கி டெபாசிட்களை காட்டிலும் இதில் வருமானமும் அதிகம் என்பதால், மக்கள் மத்தியில் இது போன்ற திட்டங்களுக்கு என்றுமே ஆதரவு அதிகம்.
3 வருடத்தில் ரூ.9 லட்சத்துக்கும் மேல் லாபம்.. முதலீடு எவ்வளவு தெரியுமா?
அதிகபட்சம் வட்டி?
தற்போதைய சூழலில் வங்களிலும் வட்டி விகிதங்கள் அதிகரிக்க தொடங்கியுள்ளன. அப்படி இருந்தும் அஞ்சலக திட்டங்கள் எப்படி சிறந்ததாக இருக்க முடியும். வங்கிகளில் அதிகபட்சமாக எவ்வளவு வட்டி டெபாசிட்களுக்கு கொடுக்கப்படுகிறது. எஸ்பிஐ-யில் அதிகபட்சமாக 5.65% வரையிலும், ஹெச்டிஎஃப்சி வங்கியில் அதிகபட்சமாக 6.10% வரையிலும் வட்டி கொடுக்கப்படுகிறது. இதே ஐசிஐசிஐயில் வட்டி விகிதம் 6.105மும், ஆக்ஸிஸ் வங்கியில் 6.05%மும், பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6.10%மும் வழங்கப்படுகின்றன.
அஞ்சலக திட்டங்கள்
இதே அஞ்சலகத்தில் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS) , பொது வருங்கால வைப்பு நிதி (PPF), சுகன்யா சம்ரிதி யோஜனா ( SSY) பிரபலமான திட்டங்களாக உள்ளன.
இதில் வட்டி விகிதங்கள் வங்கிகளுடன் ஒப்பிடும்போது அதிகம். இதில் மேற்கொண்டு வரிச்சலுகையும் கிடைக்கும்.
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்
குறிப்பாக அஞ்சலகத்தின் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்திற்கு வட்டி விகிதம் வருடத்திற்கு 7.4% வழங்கப்படுகின்றது. இதற்கான வட்டி விகிதம் காலாண்டுக்கு ஒரு முறை கொடுக்கப்படுகின்றது. இதன் வட்டி விகிதமானது வங்கி பிக்சட் டெபாசிட்களை காட்டிலும் அதிகம். இந்த திட்டம் வயதான காலக்கட்டத்தில் முதியோர்களுக்கு பாதுகாப்பு அளிக்கும் திட்டங்களில் ஒன்றாக உள்ளது. இதியோ 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் இணைந்து கொள்ளலாம். 55 வயதிற்கு மேல் ஓய்வுபெறுபவர்களும் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம்.
SCSS – வரிச்சலுகை
இதில் குறைந்தபட்சம் 1000 ரூபாய் முதல் முதலீடு செய்து கொள்ளலாம். அதிகபட்சம் 15 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம். இந்த திட்டம் மூத்த குடிமக்களுக்கு என்பதால் 80சி பிரிவின் கீழ் வரி சலுகை கிடைக்கிறது. எனினும் வட்டி யாக கிடைக்கும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படுகின்றது. பொருந்தக்கூடிய வகையில் டிடிஎஸ் பிடித்தமும் உண்டு.
பொது வருங்கால வைப்பு நிதி
பொது வருங்காலை வைப்பு நிதி திட்டம் அஞ்சலக திட்டங்களில் மிகச் சிறந்த திட்டங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றது. இந்த திட்டத்தில் நிலையான வருமானத்துடன் கூடிய, EEE (exempt-exempt-exempt) பிரிவின் கீழ் மூன்று வரிச்சலுகையும் பெற முடியும். இந்த திட்டத்திலும் தற்போது 7.1% வட்டி விகிதம் விதிக்கப்படுகின்றது. இதில் குறைந்தபட்சம் 500 ரூபாய் முதல் அதிகபட்சமாக 1.5 லட்சம் ரூபாய் வரையில் முதலீடு செய்து கொள்ளலாம்.
பிபிஎஃப் – கூட்டு வட்டி
பிபிஎஃப் திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள். இதனை முதிர்வு காலத்திற்கு பிறகும் 5 ஆண்டு தொகுப்புகளாக நீட்டித்துக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் கூட்டு வட்டியின் மூலம் மிகப்பெரிய லாபத்தினை பெறலாம். இது எதிர்பார்க்காத லாபகரமான ஒன்றாகவும் இருக்கும்.
சுகன்யா சம்ரிதி யோஜனா
சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டம் பெண் குழந்தைகளுக்கான தொடங்கப்பட்ட சிறந்த திட்டங்களில் ஒன்று. இதில் 80 சி பிரிவின் கீழ் 1.5 லட்சம் ரூபாய்க்கு வரிச்சலுகை கிடைக்கிறது. இந்த திட்டத்திற்கு தற்போதைய்ய நிலவரப்படி வட்டி விகிதம் 7.6% ஆகும். தற்போது வழங்கப்பட்டு வரும் இந்த வட்டி விகிதமானது பணவீக்கத்திற்கு மேலாக வழங்கப்பட்டு வருகின்றது.
SSY – முதிர்வு காலம்
இதில் குறைந்தபட்சம் 250 ரூபாயும், அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாயும் டெபாசிட் செய்து கொள்ளலாம். இந்த கணக்கினை பெண் குழந்தையின் 10 வயது வரையில் தொடங்கிக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் முதிர்வு காலம் 15 ஆண்டுகள் அல்லது 18 வயதுக்கு மேல் எப்போது திருமணம் ஆகிறதோ அப்போது முதிர்வடைகிறது. இதனை இடையில் பெண் குழந்தையின் உயர் கல்விக்காக பகுதி தொகையினை எடுத்துக் கொள்ள முடியும்.
Bank FDs Vs Post office schemes: Which is more profitable? Is there a tax benefit?
Bank FDs Vs Post office schemes: Which is more profitable? Is there a tax benefit?/வங்கி வட்டியை விட அதிக லாபம்.. கூடவே வரி சலுகை.. அட்டகாசமான 3 அஞ்சலக திட்டங்கள்.. ?