நடுக்கடலில் பற்றி எறிந்த கப்பல்..! – கடலில் குதித்த பயணிகள்..!

பிலிப்பைன்ஸ் நாட்டின் ஓரியண்டல் மிண்டோரோ மாகாணத்தில் உள்ள கலபன் நகரில் கேஸ் துறைமுகத்தில் இருந்து, கேளத்தன் என்ற துறைமுகத்திற்கு பயணிகள் கப்பல் ஒன்று சென்றது.அதில் சுமார் 49 பயணிகள் மற்றும் 38 பணியாளர்கள் என மொத்தம் 82 பேர் பயணித்துள்ளனர்.
அப்போது கப்பல் துறைமுகத்தை நெருங்க 1 கி.மீ. தொலைவில் இருந்தபோது, திடீரென கப்பலில் இருந்து கரும்புகை கிளம்பியுள்ளது. இதனால் பதற்றமடைந்த பயணிகள் அலறத் தொடங்கினர்.உடனடியாக பிலிப்பைன்ஸ் கடற்படை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.இதற்கிடையே கப்பல் முழுவதுமாக தீ மளமளவென் பரவி எரியத்தொடங்கியதை அடுத்து, பலர் பயத்தில் தங்களை காப்பாற்றிக்கொள்ள கடலில் குதித்தனர்.

பின்னர் நிகழ்விடத்திற்கு வந்த கடலோர காவல்படை வீரர்கள் தண்ணீரில் தத்தளித்தவர்களைமீட்டனர்.மேலும் தொடர்ந்து மீட்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர்கள் திவீர முயற்சிக்குப் பின்னர் முதலில் 73 பேரை பத்திரமாக மீட்டுள்ளனர்.

எஞ்சியவர்களை தேடும் பணி தொடர்ந்து வந்த நிலையில் 80 பேர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 பேரை காணவில்லை எனவும், அவர்களை தேடி வருவதாகவும்தகவல்தெரிவிக்கப்பட்டுள்ளது.கப்பல் என்ஜினில் ஏற்பட்ட கோளாறால் இந்த விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவலில் வெளியாகி உள்ளது.

விபத்திற்கான காரணங்கள் முழுமையாக ஆய்வு செய்யப்பட்டு நடவடிக்கை. எடுக்கப்படும் எனபிலிப்பைன்ஸ் அரசு தெரிவித்திருக்கிறது.நடுக்கடலில் கப்பல் தீ பிடித்து எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.