வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி-‘எங்களிடம் இருந்து பெட்ரோலிய பொருட்கள் வாங்கும் மேற்கத்திய நாடுகள், இந்தியா வாங்குவதற்கு மட்டும் எதிர்ப்பு தெரிவிக்கின்றன; இது, அவற்றின் இரட்டை வேடத்தை காட்டுவதாக உள்ளது’ என, ரஷ்ய துாதர் குறிப்பிட்டுள்ளார்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. இதையடுத்து ரஷ்யாவுக்கு எதிராக அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்துள்ளன.இந்நிலையில், ரஷ்யாவிடம் இருந்து தள்ளுபடி விலையில் இந்தியா பெட்ரோலிய பொருட்களை வாங்கி வருகிறது. இதற்கு ஐரோப்பிய நாடுகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.இந்தப் பிரச்னை குறித்து இந்தியாவுக்கான ரஷ்ய துாதர் டெனிஸ் அலிபோவ் கூறியுள்ளதாவது:எங்கள் மீது பொருளாதார தடை விதிப்பது குறித்து ஐரோப்பிய நாடுகள் தவறாக கணித்துள்ளன. எங்களுக்கு பாதிப்பு ஏற்படும் என நினைத்தன.
ஆனால், அதன் தாக்கத்தை உலக நாடுகள் சந்தித்து வருகின்றன. பல பொருட்களின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.எங்களிடம் இருந்து இந்தியா பெட்ரோலிய பொருட்களை வாங்குவதற்கு, ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஆனால், அந்த நாடுகள் எங்களிடம் இருந்து தான் பெட்ரோலிய பொருட்களை வாங்குகின்றன.இந்த விஷயத்தில் மேற்கத்திய நாடுகள் இரட்டை வேடம் போடுகின்றன.
இந்தியா – ரஷ்யா இடையே மிக நீண்ட காலமாக நல்ல உறவு உள்ளது; வர்த்தக ரீதியிலும் சிறப்பான நட்புறவு உள்ளது.இதுவரை ரஷ்யாவிடம் இருந்து இந்தியா அதிகளவில் பெட்ரோலிய பொருட்களை வாங்கியதில்லை. தற்போது மிக அதிகளவில் வாங்கி வருகிறது.தன் உள்நாட்டு தேவைக்காகவும், விலை ஏறுவதை தவிர்க்கவும் இந்திய அரசு இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement