ஆசிய கோப்பை : பந்துவீச்சில் ஜொலித்த இந்தியா…! 148 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது பாகிஸ்தான்

துபாய்,

ஆசிய கோப்பை 20 ஓவர் கிரிக்கெட்டில் துபாயில் இன்று அரங்கேறும் 2-வது லீக் ஆட்டத்தில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் (ஏ பிரிவு) மோதுகின்றன . ஐ.சி.சி. உலக கோப்பை மற்றும் ஆசிய கோப்பை போட்டிகளில் மட்டுமே தற்போது இவ்விரு அணிகளும் மோதுகின்றன. அதனால் முன்பை விட இப்போது எதிர்பார்ப்பு இன்னும் எகிறி விட்டது. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது.அதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.அதன்படி பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது.

தொடக்க வீரர்களாக கேப்டன் பாபர் அசாம் ,முகமது ரிஷ்வான் களமிறங்கினர்.தொடக்கத்தில் பாபர் அசாம் 10 ரன்களில் புவனேஷ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.பின்னர் வந்த பகர் ஜமான் 10 ரன்களில் வெளியேறினார்.அடுத்துவந்த இப்திகார் அகமது, முகமது ரிஸ்வானுடன் இனைந்து நிலைத்து ஆடினார்.இருவரும் சிறப்பாக விளையாடி ரன்கள் சேர்த்த்னர்.

அணியின் ஸ்கோர் 87 ரன்னாக இருந்தபோது இப்திகார் 28 ரன்களில் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் வெளியேறினார்.மறுபுறம் நிதானமாக ஆடி வந்த ரிஷ்வான் 43 ரன்களில் ஹார்திக் பாண்டியா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.தொடர்ந்து வந்த குஷ்தில் ஷா பாண்டியா வீசிய அதே ஓவரில் 2 ரன்களில் வெளியேறினார்.

பின்னர் பாகிஸ்தான் அணி ரன்கள் குவிக்க முடியாமல் தடுமாறியது.அடுத்து வந்த வீரர்கள் இந்திய அணியின் அபாரமான பந்துவீச்சில் அடுத்தடுத்து வெளியேறினர் .கடைசியில் தஹானி 2 சிக்ஸர்கள் பறக்க விட்டார் . இறுதியில் பாகிஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 10 விக்கெட் இழப்பிற்கு 147ரன்கள் எடுத்தது.இந்தியா சார்பில் சிறப்பாக வீசிய புவனேஸ்வர் குமார் 4 விக்கெட் ,ஹார்திக் பாண்டியா 3 விக்கெட் ,அர்ஷிதீப் சிங் 2 விக்கெட்,அவேஷ் கான் 1விக்கெட் வீழ்த்தினர்.

இதனை தொடர்ந்து 148ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாட உள்ளது


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.