பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தலைவர் ஜெ.பி.நட்டா, தேசிய அமைப்புச் செயலாளர் பி.எல்.சந்தோஷ் உள்ளிட்ட பாஜக தலைவர்களுடன் கர்நாடக முன்னாள் முதலமைச்சர் பி.எஸ்., எடியூரப்பா வெள்ளிக்கிழமை (ஆகஸ்ட் 26) டெல்லியில் நடத்திய சந்திப்பு தொடர் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கர்நாடகாவில் தற்போதைய மாநில பாஜக தலைவர் நளின் கட்டீலின்( Nalin Kateel) மூன்றாண்டு பதவிக்காலம் இன்றுடன் (ஞாயிற்றுக்கிழமை) முடிவடைகிறது.
எடியூரப்பாவின் முன்னாள் கூட்டாளியான மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே, கட்டீலுக்குப் பின் பதவிக்கு வருவதற்கு விருப்பமானவர்களில் ஒருவர் ஆவார். பாஜக தேசிய பொதுச் செயலாளர் சிடி ரவி; மாநில எரிசக்தி அமைச்சர் சுனில் குமார் கார்கலா மற்றும் முன்னாள் மாநில அமைச்சர் அரவிந்த் லிம்பவல்லி ஆகியோரும் இந்தப் பட்டியலில் உள்ளனர்.
தலைமையுடனான கலந்துரையாடலின் போது அடுத்த கர்நாடக பாஜக தலைவர் பற்றிய பிரச்சினை எழுந்ததாக எடியூரப்பா மறுத்தாலும், அடுத்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இது ஒரு அழுத்தமான விஷயமாக கருதப்படுகிறது.
ஜூலை 2021 இல் முதலமைச்சர் பதவியில் இருந்து இறங்கிய ஒரு வருடத்திற்குப் பிறகு, எடியூரப்பா சமீபத்தில் கட்சியின் மிக உயர்ந்த முடிவெடுக்கும் அமைப்பான பாஜக நாடாளுமன்ற வாரியத்தில் சேர்க்கப்பட்டதன் மூலம் மறுவாழ்வு பெற்றார்.
சந்தோஷ் மாநிலப் பொறுப்பை ஏற்றபோது கட்டீலினுக்கு ஆதரவாக இருந்ததாகக் கூறப்படுகிறது.
ஜூலை 27 அன்று தட்சிண கன்னடா மாவட்டத்தில் பாஜக இளைஞரணித் தலைவர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து வலதுசாரி தொண்டர்களின் கோபம் இவர் மீதும் திரும்பியது.
சமீபத்திய வாரங்களில், மாநில பாஜக தலைவர், தட்சிண கன்னடாவில் இருந்து ஒரு கட்சித் தலைவராகவும், எம்பியாகவும் செயல்படாததற்காக சமூக ஊடகங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டார்.
பிரதமர் மோடி செப்டம்பர் 2 ஆம் தேதி தட்சிண கன்னடாவில் உள்ள மங்களூருவில் ஒரு பேரணியில் உரையாற்ற உள்ளார். இது அவரது சொந்த மைதானத்தில் கட்டீலின் புகழ் வரலாறு காணாத அளவுக்கு வீழ்ச்சியடைந்திருக்கும் நேரத்தில் வருகிறது.
பிரதமரின் வருகையின் போது மாநில பாஜக தலைமை மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய மாநில பாஜக தலைவருக்கான வாய்ப்புகள் குறித்து கேட்டபோது, “அதை கட்சி முடிவு செய்யும், அதைப் பற்றி நான் தலையை உடைக்க மாட்டேன்” என்று எடியூரப்பா வெள்ளிக்கிழமை புதுடெல்லியில் கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், “நான் நட்டா ஜியிடம் பேசி, கட்சியை ஆட்சிக்கு கொண்டு வர, மாநிலத்திற்கு அதிக நேரம் ஒதுக்கி, சுற்றுப் பயணம் செய்யும்படி கூறினேன். அரசுக்கு கால அவகாசம் தருவதாக கூறியுள்ளார்.
மங்களூருவில் பிரதமரின் செப்டம்பர் 2 நிகழ்ச்சியை நாங்கள் பெரிய அளவில் நடத்த விரும்புகிறோம். பிரதமர், நட்டா, அமித் ஷா ஆகியோர் கர்நாடகாவுக்கு கூடுதல் அவகாசம் வழங்குவார்கள். கர்நாடக அரசியல் நிலவரம் மற்றும் கட்சி நிலவரம் குறித்து நட்டாவிடம் விரிவாக விவாதித்தேன், எட்டு மாதங்களுக்குள் தேர்தலை சந்திக்க உள்ளதால், தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்பதால் அடிக்கடி கர்நாடகா வருமாறு கேட்டுக் கொண்டேன்.
எனக்கு புதிய பொறுப்பு கிடைத்தவுடன், அனைவரையும் சந்தித்து கலந்துரையாடுவது எனது கடமை என்று நினைக்கிறேன். அவர்கள் அளிக்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகள் எடுக்கப்பட்டு செயல்படுத்தப்படும்” என்றார்.
இதற்கிடையில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை ஞாயிற்றுக்கிழமை (ஆகஸ்ட் 28), கட்சித் தலைவராக கட்டீலை மாற்றுவதற்கான பேச்சுவார்த்தை குறித்து தனக்குத் தெரியாது என்றும் மாநில பாஜக தலைவரை ஆதரிப்பதாகவும் கூறினார்.
அப்போது, “அது பற்றி எனக்குத் தெரியாது (கட்சித் தலைவரை மாற்றலாம்). விவாதம் நடக்கவில்லை,” என்றார். தொடர்ந்து, “கடந்த மூன்று வருடங்களாக, கட்டீல் கட்சியை திறமையான முறையில் நடத்தி வருகிறார். அவர் எட்டு முதல் 10 முறை மாநிலத்தை சுற்றி வந்துள்ளார்.
கிராம பஞ்சாயத்து தேர்தல் மற்றும் விதான் பரிஷத் தேர்தலுக்காக பூத் மட்டத்திலிருந்து கட்சிக்கு நிர்வாகிகளை நியமித்து, அதை வெற்றிகரமாக செய்து முடித்துள்ளார்.
அவரது தலைமையில் நாங்கள் முன்னேறி வருகிறோம். அவரது தலைமை கட்சியை பலப்படுத்தும்” என்றார்.
எடியூரப்பாவின் முக்கியத்துவம்
2019ல் கட்சித் தலைவராக எடியூரப்பாவுக்குப் பிறகு கட்டீல் பதவியேற்றதால், முன்னாள் முதல்வர் கட்சியிலிருந்து ஒதுங்கி காணப்பட்டார்.
ஆகஸ்ட் 17 அன்று சந்தோஷ் அடங்கிய 11 உறுப்பினர்களைக் கொண்ட பார்லிமென்ட் போர்டில் நியமிக்கப்பட்டதிலிருந்து அவர் இப்போது மாநிலத்தில் பாஜக விவகாரங்களில் முன்னணியில் உள்ளார்.
பாஜக தேசியக் குழுவில் நியமிக்கப்பட்ட நாளில், எடியூரப்பா கட்சி அலுவலகம் திரும்பினார். முன்னதாக கடந்த மூன்று ஆண்டுகள் (2019 முதல் 2022 வரை) அவர் முக்கிய கட்சி அமைப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகி இருந்தார். எடியூரப்பா அழைக்கப்பட்டால் கூட்டங்களில் கலந்துகொள்வதற்காக மட்டுமே கட்சி அலுவலகத்திற்கு வந்தார்.
ஆகஸ்ட் 4 ஆம் தேதி, கர்நாடகாவில் பாஜக மீண்டும் எடியூரப்பாவை வழிநடத்தும் என்பதன் முதல் அறிகுறியாக, அமித் ஷா பெங்களூருவுக்கு சென்று பாஜக தலைவர்களுடன் கட்சியின் வியூகங்கள் குறித்து பேசினார். அப்போது, எடியூரப்பாவுடன் 20 நிமிடங்கள் கலந்துரையாடினார்.
சட்டமன்ற தேர்தலுக்காக. எடியூரப்பா தனது சுதந்திர தின உரையில், கர்நாடக பாஜக தேர்தலில் கூட்டுத் தலைமையின் கீழ் போட்டியிடும் என்றும் எந்த தலைவரையும் முன்னிறுத்தாது என்றும் அறிவித்தார் என்பது நினைவு கூரத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“