மண்டியா:
மந்திரி ஆய்வு
கைத்தறி மற்றும் ஜவுளித்துறை மந்திரி சங்கர் பி.பட்டீல், மண்டியாவில் மைசுகர் சர்க்கரை ஆலையை அதிகாரிகளுடன் நேரில் சென்று ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மண்டியா மைசுகர் சர்க்கரை ஆலை மீண்டும் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்படுகிறது. இதற்கான பணிகள் செப்டம்பர் 10-ந் தேதிக்குள் முடிவடைந்துவிடும். இதையடுத்து அன்றைய தினம் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, சர்க்கரை ஆலையை திறந்து வைக்கிறார். இந்த சர்க்கரை ஆலை கர்நாடகத்திற்கு பெருமை சேர்க்கும் வண்ணம் அமைந்துள்ளது. மைசுகர் சர்க்கரை ஆலை, அரசின் கட்டுபாட்டின் கீழ்தான் இயங்கும். அனைத்து பணிகளும் வெளிப்படை தன்மையுடன் நடைபெறும்.
விவசாயிகளுக்கு நன்மை
முறைகேடுக்கு இடம் கொடுக்கப்படமாட்டாது. ஆரம்பத்தில் நிதி சுைம ஏற்பட்டது. பின்னர் அவை சரி செய்யப்பட்டது. வருகிற31-ந் தேதியில் இருந்து கரும்புகள் கொள்முதல் செய்யபடும். அந்த பணிகள் முடிந்த பின்னர் தொழிற்சாலையில் எத்தனால் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். கரும்பு விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வகையில் இந்த தொழிற்சாலை இயங்கும். அதேநேரம் விவசாயிகளும் சர்க்கரை ஆலை இயங்க முழு ஒத்துழைப்பு வழங்கவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.