TNPSC recruitment 2022 for Group 5 exam how to apply online: தமிழக தலைமை செயலகத்தில் குரூப் 5 நிலை பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி வெளியிட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கான தகுதிகள் என்ன? விண்ணப்பம் செய்வது எப்படி? என்பது உள்ளிட்ட தகவல்களை இப்போது பார்ப்போம்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) தலைமைச் செயலக பணியில் அடங்கிய உதவிப் பிரிவு அலுவலர் மற்றும் உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதில் மொத்தம் 161 பணியிடங்கள் நிரப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் பணி மாறுதல் முறையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 21.09.2022க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.
இதையும் படியுங்கள்: சென்னை பெட்ரோலியம் கார்ப்ரேஷன் வேலைவாய்ப்பு; டிகிரி, பி.இ/பி.டெக் படித்தவர்கள் மிஸ் பண்ணாதீங்க!
உதவிப் பிரிவு அலுவலர் (Assistant Section Officer)
காலியிடங்களின் எண்ணிக்கை: 74
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 36,400 – 1,34,200
உதவிப் பிரிவு அலுவலர் – நிதித்துறை
காலியிடங்களின் எண்ணிக்கை: 29
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 5 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 36,400 – 1,34,200
உதவியாளர் (Assistant)
காலியிடங்களின் எண்ணிக்கை: 49
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 20,000 – 73,700
உதவியாளர் – நிதித்துறை
காலியிடங்களின் எண்ணிக்கை: 9
கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் வணிகவியல் அல்லது பொருளாதாரம் அல்லது புள்ளியியல் பிரிவில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் 3 வருட பணி அனுபவம் அவசியம்.
சம்பளம் : ரூ. 20,000 – 73,700
வயதுத் தகுதி: உதவி பிரிவு அலுவலர் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும்.
உதவியாளர் பணியிடங்களுக்கு 01.07.2022 அன்று 35 வயதிற்குள் இருக்க வேண்டும். SC, SC(A), ST பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு முறை: இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு இரண்டு தாள்களாக நடைபெறும். இதில் முதல் தாள் பொதுத் தமிழ். இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. இதற்கான கால அளவு 3 மணி நேரம்.
இரண்டாம் தாள் பொது அறிவு. இது 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். குறைந்தபட்சம் எடுக்க வேண்டிய மதிப்பெண்கள் 60. இதற்கான கால அளவு 3 மணி நேரம். இரண்டு தாள்களுக்கும் விரிந்துரைக்கும் வகையில் விடையளிக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம் : ரூ. 150, இருப்பினும் ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வுக் கட்டணம் : ரூ. 100, இருப்பினும் SC, SC(A), ST மற்றும் விதவைகள் உள்ளிட்ட பிரிவுகளுக்கு கட்டணம் செலுத்துவதிலிருந்து விலக்கு உண்டு.
விண்ணப்பம் செய்வது எப்படி?
விண்ணப்பிக்க விரும்புபவர்கள் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
ஏற்கனவே நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் அதன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிரந்தரப்பதிவு வைத்திருப்பவர்கள் விண்ணப்பக் கட்டணம் செலுத்த தேவையில்லை.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பம் செய்பவர்கள் தங்களது புகைப்படம் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை ஆணையம் அறிவித்துள்ள அளவு மற்றும் பார்மட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மேலும், தங்களது கல்வி மற்றும் பிறச் சான்றிதழ்களை கையில் வைத்துக் கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். உங்களது அனைத்து விவரங்களையும், சரியாக உள்ளிட்டு விண்ணப்பக் கட்டணத்தையும் செலுத்தி, சமர்ப்பிக்க வேண்டும். சமர்பிக்கப்பட்ட விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து, சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி: 21.09.2022
இது குறித்து மேலும் விவரங்கள் அறிய https://www.tnpsc.gov.in/Document/tamil/21_2022_Group_V_A_Notfn_Tamil.pdf என்ற இணையதள பக்கத்தை பார்வையிடவும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil