சென்னை : நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவரும் தற்போது தங்களது இரண்டாவது ஹனிமூனை சிறப்பாக கொண்டாடி வருகின்றனர்.
Recommended Video
முதல் ஹனிமூனை சில தினங்களிலேயே முடித்துக் கொண்டு நாடு திரும்பிய இந்த ஜோடி, தொடர்ந்து தங்களது பணிகளில் சிறப்பாக ஈடுபட்டது.
ஆனால் தற்போது பார்சிலோனாவில் இவர்கள் கடந்த சில தினங்களாக தொடர்ந்து ஹனிமூனில் ஈடுபட்டுள்ளனர்.
முடியாத காதல் கதை
நடிகை நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. கடந்த 7 ஆண்டுகளாக நீடித்த இவர்களின் காதல் கதை தற்போது திருமணத்தில் முடிந்துள்ளது. ஆனால் திருமணம் இவர்களின் காதல் கதையை முடிக்கவில்லை. அது தொடர்ந்துதான் வருகிறது.
முதல் ஹனிமூன்
திருமணமான உடனேயே தாய்லாந்திற்கு இந்த ஜோடி சுற்றுப்பயணம் மேற்கொண்டது. அங்கு ஒரு சில தினங்கள் என்ஜாய் செய்த இவர்கள், தொடர்ந்து நாடு திரும்பினர். நயன்தாரா ஜவான் சூட்டிங்கிலும் விக்னேஷ் சிவன், சர்வதேச செஸ் ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் துவக்க விழா கொண்டாட்டத்திலும் பிசியாகினர்.
இரண்டாவது ஹனிமூன்
இந்நிலையில் தற்போது இந்த கமிட்மெண்ட்களை முடித்துக் கொண்டு இடைவெளியை ஏற்படுத்திக் கொண்ட நயன்தாரா -விக்னேஷ் சிவன் தற்போது மீண்டும் பார்சிலோனாவிற்கு இரண்டாவது ஹனிமூனுக்கு கிளம்பி சென்று விட்டனர். அங்கிருந்து இவர்கள் தினந்தோறும் போஸ்ட் செய்துவரும் பதிவுகள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருகின்றன.
உல்லாசப் பறவைகள்
உல்லாச பறவைகளாக பார்சிலோனாவின் பழமை மாறாத பல இடங்களில் இவர்கள் சுற்றித் திரிகின்றனர். சில சமயம் செல்ஃபிக்களாக புகைப்படங்கள் பதிவு செய்யப்படுகின்றன. சில சமயம் தேர்ந்தெடுத்த புகைப்படக்காரர்களின் கைவண்ணங்களிலும் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு பதிவிடப்படுகின்றன. இவை அனைத்தும் ரசிகர்களின் ஏராளமான லைக்ஸ்களை பெற்று வருகின்றன.
நயன்தாராவின் விளம்பர பட வீடியோ
இந்நிலையில் இன்றைய தினம் நயன்தாராவின் புதிய விளம்பரப் பட வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். இந்த விளம்பரப் படம் நயன்தாரா நடித்ததிலேயே தன்னை மிகவும் கவர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அவர் கூறியதற்கேற்ப இந்த வீடியோவில் நயன்தாரா மிகவும் அழகாக காணப்படுகிறார்.
விக்னேஷிற்கு பிடித்த வீடியோ
லிப் பாமிற்காக எடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவில் நயன்தாராவின் உதடுகள் மற்றும் அவரது புன்னகை மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளன. வித்தியாசமான உடைகள் இருந்தாலும் இவை தான் அந்த வீடியோவின் ஹைலைட்டாக காட்டப்பட்டுள்ளன. நயன்தாராவின் புன்னகை ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.