மேட்டூர்: வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
மேட்டூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக பாமகவைச் சேர்ந்த சதாசிவம் உள்ளார். அவர் சில தினங்களுக்கு முன்பு கொளத்தூர் அருகே உள்ள கருங்காலூரில் நடந்த பாமக ஒன்றிய நிர்வாகிகள் கூட்டத்தில், சமூக நல்லிணக்கத்துக்கு எதிராகவும், சாதிப் பிரிவினை மற்றும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக, விடுதலை சிறுத்தை கட்சியின் வடக்கு மாவட்ட செயலாளர் வசந்த் கடந்த 25-ம் தேதி கொளத்தூர் காவல் நிலையத்திலும், நேற்று முன்தினம் சேலம் எஸ்.பி. அலுவலகத்திலும் புகார் அளித்திருந்தார். இதையடுத்து நேற்று எம்எல்ஏ சதாசிவம் மீது, 2 பிரிவுகளில் கொளத்தூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.