நாம் சிறுவயது முதல் வீட்டில் அடிக்கடி சாப்பிடும் பழமாக பப்பாளி பழம் இருந்திருக்கிறது. இதன் நன்மைகள் குறித்து ஊட்டச்சத்து நிபுணர் கவித தேவ்கன் கூறுகையில் அவரது, பாட்டி தினமும் பப்பாளி பழம் சாப்பிடுவார். அது ஜீரணத்தை நன்றான நிலையில் வைத்திருக்கிறது.
150 கிராம் பப்பாளியில் 60 கலோரிகள் இருக்கிறது. இதில் பொட்டாஷியம், வைட்டமின் எ,சி,இ,கே வைட்டமின் பி9 ஆகியவை இருக்கிறது. மேலும் இதில் மெக்னீஷியம், கால்ஷியம், இரும்புசத்து, கரொடிநாய்ட்ஸ் மற்றும் ஆண்டி ஆக்ஸிடன்ட் இருக்கிறது.
இதன் க்லைசிமிக் இண்டக்ஸ் சமநிலையில் இருப்பதால் சர்க்கரை நோயாளிகள் தைரியமாக இதை சாப்பிடலாம். மேலும் பல சத்துக்களை இது சர்க்கரை நோயாளிகளுக்கு தருகிறது.
இதில் இருக்கும் ப்போலேட் என்ற பொருள், ரத்தத்தில் இதய நோய் உண்டாவதற்கான ஹோமோசிஸ்டைனை குறைக்கிறது. மேலும் கெட்ட கொலஸ்ட்ராலையும் குறைக்கிறது. இதனால் ரத்த அழுத்தம் ஏற்படாமலும் தடுக்கிறது.
நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாகவும் உதவுகிறது. இதில் இருக்கும் வைட்டமின் ஏ, சி மற்றும் இ ஆகியவை நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது. உடல் சோர்வு, வாந்தி, மயக்கம் போன்ற பிரச்சனைகளுக்கு தீர்வாக இருக்கிறது.
இது மலச்சிக்கல், அஜீரணம் ஆகியவற்றை குணப்படுத்துகிறது. உணவு பொருட்களை உடைத்து செரிமானப்படுத்த உதவுகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil