சென்னை : கே ஜி எஃப் படத்தில் நடித்த நடிகர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் சிகிச்சைக்கு உதவி செய்யுமாறு கேட்டுள்ளார்.
Recommended Video
பிரசாந்த் நீலின் இயக்கத்தில் யஷ் நடிப்பில் ஏப்ரல் மாதம் 14-ம் தேதி வெளியான திரைப்படம் கேஜிஎப் 2. ரசிகர்களின் மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படம், விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பிரம்மாண்ட வெற்றியை பெற்றது.
அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்ற இத்திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாயைத் தாண்டி வசூலித்து சாதனை படைத்துள்ளது.
கே.ஜி.எஃப்
நடிகர் யாஷ் நடிப்பில், பிரசாந்த் நீல் இயக்கத்தில் கடந்த 2019-ல் வெளியான கே.ஜி.எஃப் படத்தின் முதல்பாகம் இந்திய அளவில் பிரமாண்ட வரவேற்பை பெற்றது. கேஜிஎஃப் முதல் பாகத்தில் கிடைத்த வரவேற்பை விட இரண்டாம் பாகத்தில் ஒவ்வொரு காட்சியிலும் மிரட்டி இருப்பார் யாஷ். திடமான தேகம், ஷார்ப்பான பார்வை, மிரட்டலான நடிப்பு, அம்மாவுக்காக பறிதவிக்கும் மனம் என ஒவ்வொரு காட்சியிலும், யாருக்கும் சளைத்தவர் இல்லை என்பதை நிரூபித்து இருப்பார்.
ஹரிஷ் ராய்
கே ஜி எஃப் இரண்டு பாகங்களிலும் காசிம் என்ற வேடத்தில் நடித்த கன்னட நடிகர் ஹரிஷ் ராய், தொண்டை புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில், அவர் தனது உடல்நிலை குறித்து அதிர்ச்சியூட்டும் தகவல்களை வெளியிட்டார், மேலும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் கே ஜி எஃப் இரண்டாம் பாகத்தின் படப்பிடிப்பின் போது புற்று நோயால் பாதிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
தாடியை வைத்து மறைத்தேன்
யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஹரிஷ் ராய், தனது நோய் பற்றி மனம் திறந்து பேசினார். சூழ்நிலைகள் உங்களுக்கு மகத்துவத்தை அளிக்கலாம் அல்லது உங்களிடமிருந்து பொருட்களை எடுத்துச் செல்லலாம். விதியில் இருந்து தப்ப முடியாது. நான் மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வருகிறேன். தொண்டையில் ஏற்பட்ட வீக்கத்தை மறைக்கவே தாடியை வைத்து மறைத்ததாக கூறியுள்ளார்.
மோசமான நிலையில்
மேலும் ,முதலில் என்னிடம் பணம் இல்லாததால் அறுவை சிகிச்சையை தள்ளி வைத்தேன். படங்கள் வெளியாகும் வரை காத்திருந்தேன். இப்போது நான்காவது கட்டத்தில் இருக்கிறேன், நிலைமை மோசமாகி வருகிறது என்று கூறியுள்ளார். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. மேலும் அவர் தன் சிகிச்சைக்காக நிதியுதவி கேட்டும் கோரிக்கை வைத்துள்ளார்.