லண்டன் : பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய கார், 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.
ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி டயானா, 1997 ஆகஸ்ட் 31ல் பிரான்ஸ் நாட்டின் பாரிசில் நிகழ்ந்த கார் விபத்தில் உயிரிழந்தார். அவரது 25வது நினைவு தினத்தையொட்டி, 1980களில் அவர் பயன்படுத்திய கருப்பு நிற ‘போர்டு எஸ்கார்ட் ஆர்.எஸ்.டர்போ’ கார்’, நேற்று முன்தினம் ஏலத்துக்கு விடப்பட்டது.இதில் உலகம் முழுதுமுள்ள டயானாவின் அபிமானிகள், தொழில் அதிபர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அந்த கார், இந்திய மதிப்பில் 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் போனதாக, பிரபல ‘சில்வர்ஸ்டோன்’ ஏல நிறுவனம் தெரிவித்தது. ஏலம் எடுத்த நபர் குறித்து, அந்நிறுவனம் தகவல் ஏதும் தெரிவிக்கவில்லை.டயானா பயன்படுத்திய மற்றொரு சிறிய ரக போர்டு எஸ்கார்ட் கார், கடந்த ஆண்டு 49 லட்சம் ரூபாய்க்கு ஏலத்தில் விற்கப்பட்டது.
லண்டன் : பிரிட்டனின் மறைந்த இளவரசி டயானா பயன்படுத்திய கார், 6.11 கோடி ரூபாய்க்கு ஏலம் எடுக்கப்பட்டுள்ளது.ஐரோப்பிய நாடான பிரிட்டனின் இளவரசி டயானா, 1997 ஆகஸ்ட் 31ல் பிரான்ஸ் நாட்டின் பாரிசில்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்