இன்னும் 29 நாட்கள் தான்… திருப்பதியில் ஏழுமலையான் பக்தர்களுக்கு சர்ப்ரைஸ்!

ஆந்திர மாநிலம் திருப்பதி திருமலையில் உள்ள ஏழுமலையான் திருக்கோயிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா வரும் செப்டம்பர் 27ஆம் தேதி தொடங்குகிறது. இதையடுத்து ஒன்பது நாட்கள் கோலாகலமாக விழா நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. நடப்பாண்டு சிறப்பான முறையில் விழாவை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் (TTD) முடிவு செய்துள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பெருந்தொற்று காரணமாக எளிமையான முறையில் பிரம்மோற்சவ விழா நடத்தப்பட்டது.

நான்கு மாட வீதிகளில் சுவாமி வீதி உலா நடைபெறவில்லை. ஏழுமலையான் பக்தர்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. தற்போது நோய்ப் பரவல் நீங்கி இயல்பு நிலை திரும்பியுள்ளது. திருமலையில் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளன. இதையொட்டி சுவாமி வீதி உலா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. கடைசி நாளில் சக்கரத்தாழ்வார் தீர்த்தவாரி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பறவை மீது ஏறி தப்பிய சாவர்க்கர்?; பள்ளி மாணவர்கள் ஷாக்!

அப்போது தெப்பகுளத்தில் புனித நீராட பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படும். எனவே தெப்பகுளத்தில் சீரமைக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் தெப்பகுளம் புனரமைப்பு பணிகள் முடுக்கி விடப்பட்டன. ஏற்கனவே இருந்த பழைய தண்ணீர் முழுவதுமாக அகற்றப்பட்டது.

இதையடுத்து கீழ்ப்பகுதி சுத்தம் செய்யப்பட்டது. பின்னர் குழாய்களில் இருந்த சிறு பழுதுகள் சரி செய்யப்பட்டன. கிணறுகள் சுத்தம் செய்யப்பட்டன. அவற்றுக்கு வர்ணம் பூசும் பணிகள் நடைபெற்றன. கிணறுகளிலும் புனரமைப்பு பணிகள் தீவிரமாக நடந்தன. தற்போது தெப்பகுளத்தில் தண்ணீர் நிரப்பும் பணிகள் தொடங்கியுள்ளன.

இதனை தேவஸ்தான அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர். 9 நாட்கள் நடக்கும் பிரம்மோற்சவ விழாவை ஒட்டி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வருகை புரிவர். இதையொட்டி தங்குமிடம், அடிப்படை தேவைகளை நிறைவேற்றும் வசதிகள், பாதுகாப்பு,

உதவி மையங்கள், தரிசன ஏற்பாடுகள், வீதி உலாவில் பங்கேற்றல் என பல்வேறு ஏற்பாடுகளை செய்ய வேண்டியுள்ளது. இதற்கான விரிவான திட்டமிடுதலை தேவஸ்தான நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. திருமலையில் நடைபெறும் பிரம்மோற்சவ விழா வரும் அக்டோபர் 5ஆம் தேதி நிறைவு பெறுவது குறிப்பிடத்தக்கது. இதற்கு ஏழுமலையான் பக்தர்கள் தற்போதே திட்டம் வகுக்க தயாராகி விட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.