சென்னை:
ஷங்கர்
இயக்கத்தில்
கமல்
நடித்து
வந்த
இந்தியன்
2
திரைப்படம்
சில
மாதங்களாக
கிடப்பில்
இருந்தது.
Recommended
Video
and
Kamal
|
இப்பவும்
இப்படி
மிரட்டுறாங்களே!
*Kollywood
கமல்
நடிப்பில்
வெளியான
விக்ரம்
வெற்றியைத்
தொடர்ந்து
இந்தியன்
2
திரைப்படமும்
மீண்டும்
படப்பிடிப்புக்குத்
தயாராகியுள்ளது.
இந்நிலையில்,
இந்தியன்
2
படப்பிடிப்பு
குறித்து
இயக்குநர்
ஷங்கர்
முக்கியமான
முடிவு
எடுத்துள்ளதாகக்
கூறப்படுகிறது.
பாதியில்
நின்ற
இந்தியன்
2
கமல்
–
இயக்குநர்
ஷங்கர்
காம்போவில்
1996ல்
வெளியான
இந்தியன்
திரைப்படம்
ப்ளாக்
பஸ்டர்
ஹிட்
அடித்தது.
பிரம்மாண்ட
வெற்றியைப்
பெற்ற
இந்தப்
படத்தின்
2ம்
பாகம்
இரு
வருடங்களுக்கு
முன்னர்
தொடங்கப்பட்டது.
கமல்
நடிக்க,
ஷங்கர்
இயக்கத்தில்
லைகா
நிறுவனம்
இந்தியன்
2
படத்தை
தயாரிப்பதாக
முடிவானது.
அதன்படி
தொடங்கிய
இந்தியன்
2
படப்பிடிப்புத்
தளத்தில்
கிரேன்
விபத்து
ஏற்பட,
3
உதவி
இயக்குநர்
பரிதாபமாக
உயிரிழந்தனர்.
மேலும்
ஷங்கர்
–
லைகா
இடையே
பட்ஜெட்
பிரச்சினை
ஏற்பட,
இந்தியன்
2
ஷூட்டிங்
அப்படியே
கிடப்பில்
போடப்பட்டது.
மீண்டும்
தொடங்கிய
ஷூட்டிங்
இதனையடுத்து
இயக்குநர்
ஷங்கர்
தெலுங்கு
முன்னணி
நடிகர்
ராம்
சரணின்
15வது
படத்தை
இயக்க
கமிட்
ஆனார்.
அதன்படி
தில்
ராஜூ
தயாரிப்பில்
‘RC
15′
படத்தின்
ஷூட்டிங்
பிரம்மாண்டமாக
தொடங்கியது.
ராம்
சரணுடன்
கியாரா
அத்வானி
உள்ளிட
பலர்
நடிக்கும்
இந்தப்
படத்திற்கு
தமன்
இசையமைக்கிறார்.
இதனிடையே,
இந்தியன்
2
படத்தின்
தயாரிப்பில்
லைகாவுடன்
உதயநிதியின்
ரெட்
ஜெயன்ட்ஸ்
நிறுவனமும்
இணைந்தது.
இதனையடுத்து
‘இந்தியன்
2′
படத்திற்கு
மீண்டும்
பூஜை
போடப்பட்டு
ஷூட்டிங்
தொடங்கியது.
ஷங்கரின்
மாஸ்டர்
ப்ளான்
இயக்குநர்
ஷங்கர்
இந்தியன்
2
படப்பிடிப்பில்
பிஸியானதால்,
ராம்
சரணின்
படம்
கைவிடப்படுவதாக
தகவல்
வெளியானது.
உடனடியாக
இதுகுறித்து
தனது
டிவிட்டர்
பக்கத்தில்
விளக்கமளித்த
ஷங்கர்,
கமலின்
‘இந்தியன்
2′,
ராம்
சரணின்
‘RC
15′
இரண்டு
படங்களும்
ஒரே
நேரத்தில்
ஷூட்டிங்
நடைபெறும்
என
தெரிவித்தார்.
அதாவது
இந்தியன்
2
ஷூட்டிங்
மாதம்
15
நாட்களும்,
‘RC
15′
படப்பிடிப்பு
மாதத்தில்
10
நாட்களும்
எடுக்க
முடிவு
செய்யப்பட்டுள்ளதாம்.
இதில்,
‘RC
15′
ஷூட்டிங்
கிட்டத்தட்ட
80
சதவிகிதம்
முடிந்துவிட்டதாக
கூறப்படுகிறது.
வசந்தபாலன்
இயக்கவில்லை
இதனிடையே
இந்தியன்
2
படத்தில்
கமல்
நடிக்காத
சில
பகுதிகளை
ஷங்கரின்
முன்னாள்
உதவியாளர்
வசந்தபாலன்
இயக்குவதாக
சொல்லப்பட்டது.
ஆனால்,
அது
வதந்தி
என்றும்,
இந்தியன்
2
ஷூட்டிங்கை
மொத்தம்
120
நாட்களில்
முடித்துவிட
திட்டமிட்டுள்ளதோடு,
ஷங்கரே
அதை
முழுவதுமாக
இயக்கவுள்ளதாகவும்
சொல்லப்படுகிறது.
அடுத்தாண்டு
முதல்
பாதிக்குள்
இந்தியன்
2
பட
ஷூட்டிங்கை
முடித்து,
இரண்டாம்
பாதியில்
ரிலீஸ்
செய்யவுள்ளதாகவும்
கூறப்படுகிறது.
மேலும்,
விரைவில்
சென்னை
எழிலகம்
கட்டத்தில்
நடக்கும்
இந்தியன்
2
ஷூட்டிங்கில்,
பாபிசிம்ஹா,
காஜல்
அகர்வால்
இருவரும்
கலந்துகொள்ள
உள்ளதாக
தகவல்
வெளியாகியுள்ளது.